GET OUR APP
10.6.2018 - மாலை சீசன் நிலவரம்: அருமையான சீசன் - அதிகமான நீர் வரத்து, பலத்த காற்று, அவ்வப்போது மழை மற்றும் சாரல், அதிக கூட்டம்.
மெயின் அருவியில் அதிக நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.
ஐந்தருவியில் மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இன்று (16.10.2018) பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கூட்டமும் மிகக் குறைவாகவே உள்ளது.
இவ்வருட (2018) சீசன் தொடங்கியதற்கான அறிகுறிகள் இன்று காணப்படுகின்றது.குற்றாலத்திலும், சுற்றி உள்ள பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை விழுதல், இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை, தென்மேற்கிலிருந்து வரும் காற்று என்று குதூகுலத்துடன் இவ்வருட சீசன் இன்று தொடங்கியது.ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அருவியில் குளிக்க கூட்டமாக வருகின்றனர். மெயின் அருவியில் இன்னும் நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
இன்று மாலை (28.9.2018, 5.30 PM) குற்றாலத்தில் மழை பெய்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர்வரத்து சிறிது அதிகரித்துள்ளது. கூட்டம் குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.
இன்று இரவு (28.9.2018, 8.00 PM) தொடர்ந்து பெய்த மழையால் ஐந்தருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக நீர் வரத்து காரணமாக ஐந்தருவியில் இன்று (10.7.2018) மாலை 6.00 மணிக்கு குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது (8.8.2018, பிற்பகல் 12.00 மணி) மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் அதிகமான நீர் வரத்தால் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவியில் மதிய வெள்ளத்திற்குப் பிறகு நீர் வரத்து சிறிது குறைந்ததால் தற்போது (16.6.2018, மாலை 7.00 மணி) ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெயின் அருவி, ஐந்தருவி இன்று (22.6.2018) மாலை சீசன் நிலவரம் - இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை மற்றும் சாரல் பெய்ததால் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. வார விடுமுறை என்பதால் கூட்டம் நாளை அதிகமாகும் எனத்தெரிகிறது.
இன்று (14.8.2018) குற்றாலத்தில் கனமழை பொழிவதால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அருவிகளில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியின் வெள்ளப்பெருக்கை நேரலையில் காண கிளிக் செய்யவும்.
இன்று (21.6.2018) கடந்த சில மணி நேரங்களாக பொதிகை மலையில் கருமேகங்களுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இம்மழையால் எல்லா அருவிகளிலும் தொடர்ந்து நல்ல நீர்வரத்து இருந்து வருகிறது. மேலும் குற்றாலம் முழுவதும் நல்ல சாரலும் அருமையான குளிர்ந்த காற்றும் வீசுகிறது.
குற்றாலத்தில் நிலவும் இதமான குளிர் காற்று மற்றும் கரு மேகங்கள்...கடந்த சில தினங்களாக பொதிகை மலை முழுவதும் நல்ல அடர்ந்த மேகக்கூட்டங்கள் காணப்படுகின்றது. இம் மேகக்கூட்டங்களால் பொதிகை மலையில் மழை பெய்து அது நமக்கு அருவிகளில் மூலிகை கலந்த நீராக விழுகிறது. அந்த வீடியோ பதிவு கீழே...
திருநெல்வேலிக்கு வந்த கேப்டன் தோனி இன்று குற்றாலம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான அருவிக்கு வருகை புரிந்தார்.
நன்றி: தென்காசி டைம்ஸ் & மெயின்அருவி தெனாலி ராமன்.
அருமையான சாரல் மழை, குறைந்த கூட்டம், பலத்த காற்று, நல்ல தண்ணீர் வரத்துடன் இன்றைய (23.7.2018) குற்றால சீசன் மிகவும் அருமை.
நீர் வரத்து அதிகரித்ததால் பழைய குற்றால அருவியிலும் தற்போது (11.7.2018, 6.00 PM) குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவியில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு சன்னதி பஜாரில் வரும்போது நெய் அல்வா சாப்பிட்டதுண்டா?
அருமையான சுவையுடன், சுடச்சுட நெய் அல்வா, அதனுடன் அவர்கள் தரும் கார வகைகள் சாப்பிடும்போது...ஆஸம்....
சீசன் மிகவும் அருமை: குளுமையான சீதோஷ்ணநிலை, அவ்வப்போது மழை அல்லது சாரல், நல்ல காற்று மற்றும் அருவிகளில் அதிகளவு தண்ணீர். இப்போது உள்ள இந்த அருமையான குற்றால சீசனை அனுபவிக்க இதை விட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. இந்த மூன்று நாள் வார விடுமுறையை குற்றாலத்தில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.
இன்று (30.7.2018) பிற்பகல் முதல் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவியில் மாலை சிறிது நேர தடைக்குப் பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதிக நீர் வரத்துடன், சாரல் மழை மற்றும் குறைந்த கூட்டம் என்று தற்போது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.
இன்று (27.7.2018) மாலை மெயின் அருவியில் நல்ல நீர்வரத்துடன் கூட்டம் இல்லா நிம்மதியான குளியல்.
இன்று (19.6.2018) மாலை பெய்த மழையால் ஐந்தருவி குளியல் சூப்பர் - ஓரளவு கூட்டம் இருந்தாலும், நீர் வரத்து நன்றாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.
Page 1 of 5