Kutralam Live

the Spa of South India...
  • Old Falls Season Update (19.6.2018)

    இன்றைய (19.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்.

    நல்ல நேர் வரத்து, குறைந்த கூட்டம்.

  • Old Falls Season Update (21.7.2018)

    இன்றைய (21.7.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்:

    நல்ல நீர் வரத்து, பலத்த காற்று, கூட்டம்.

  • Old Falls Season Update (24.6.2018)

    இன்றைய (24.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம் - நல்ல நீர் வரத்து, வெயில், ஞாயிறு விடுமுறை என்பதால் அதிகமான கூட்டம், போக்குவரத்து நெரிசல்.

  • Old Falls Season Update (29.5.2018)

    பழைய குற்றாலத்தில் இன்று மிக நன்றாக தண்ணீர் விழுகிறது.
    கூட்டம் குறைவாக உள்ள காரணத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

  • Old Falls Season Update (9.7.2018)

    இன்றைய (9.7.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்.

    நல்ல நீர்வரத்து, சாரல், காற்று, மிதமான கூட்டம். சீசன் சூப்பர்...

  • Old Falls Today (13.7.2018)

    இன்றைய (13.7.2018) பழைய குற்றால சீசன்

  • Old is Gold - Old Photos of Kutralam

    குற்றாலத்தின் சில பழைய அரிய புகைப்படங்கள். என்றும் மாறா இளமையுடன் நம் குற்றாலம் இன்றும்...

  • Python Caught from Flood

    29.8.2017 அன்று காலை வெள்ளத்தில் வந்த மலைப் பாம்பு, தீயணைப்பு துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  • Rain - Good Water Flow in Five Falls & Main Falls (20.9.2018, 6.00 PM)

    இன்று (20.9.2018) மாலை 6.00 மணிக்கு பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூட்டம் மிகக் குறைவாகவே உள்ளது. 

  • Saral Vizha 2017 - Flower Show

    29.7.2017 அன்று நடைபெற்ற சாரல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தோட்டக் கலை சார்பில் நடைபெற்ற மலர் கண்காட்சி.

  • Saral Vizha 2018 inauguration on 28.7.2018

    குற்றாலம் கலைவாணர் அரங்கில் 28.7.2018 மாலை 6.00 மணிக்கு சாரல் விழா 2018 இனிதே துவங்கப்பட்டது. இவ்விழா 4.8.2018 வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.

    நன்றி: தென்காசி டைம்ஸ் & மெயின்அருவி தெனாலி ராமன்.

  • See How the Water Flow Suddenly Changes in Main Falls

    குற்றாலத்தில் எப்போது தண்ணீர் அதிகமாக விழும் என்று கணிப்பது மிகவும் கடினம் என்பதற்கு இன்றைய வெள்ளப்பெருக்கே நல்ல உதாரணம். கீழே உள்ள படத்தில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முன் எடுத்த படங்களின் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

  • Slow Motion Video of Five Falls

    ஐந்தருவியின் SLOW MOTION காணொளி. ஒவ்வொரு துளியும் மிக அருமை.

  • Slow Motion Video of Main Falls in Full Flow (13.6.2018)

    மெயின் அருவியில் நேற்று (13.6.2018) அதிக நீர்வரத்தின் போது எடுக்கப்பட்ட SLOW MOTION காணொளி.

     

  • Slow Motion Video of Old Falls

    பழைய குற்றால அருவியின் SLOW MOTION காணொளி. ஒவ்வொரு துளியும் மிக அருமை.

  • Soap, Shampoo, Plastics, Alcohol Banned in Falls Area

    குற்றாலம் அருவியில் எண்ணெய், சீயக்காய் மற்றும் சோப்பு பயன்படுத்தி குளிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து 37 உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், குற்றாலம் அருவில் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, சீயக்காய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் உடை மற்றும் அறை, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும், கண்காணிப்பு கேமரா, அதிக வெளிச்சம் உள்ள விளக்கு பொருத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்களும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

    திறந்தவெளி, சாலை, கார்களில், மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மதுபானம் குடிப்பவர்களை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்யவும் என்றும் குற்றாலம் பகுதியை, முறையாக பராமரிக்க வேண்டும், அருவி பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள், கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Sudden Change in Five Falls Water Flow Today (8.7.2018)

    இன்று (8.7.2018) மாலை ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமானதை காட்டும் புகைப்படம். ஒவ்வொரு நேரத்திலும் நீர் வரத்து எப்படி அதிகமானது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இன்று மாலையில் இப்போது அதிகமாக நீர் விழுகிறது என்று இன்று காலை குற்றாலம் சென்றவர்களிடம் கூறினால் நம்ப மாட்டார்கள்.

  • Super Season @ Kutralam - Don't Miss it

    கடந்த சில தினங்களாக சீசன் சுமாராக இருந்தது அறிந்ததே. ஆனால் தற்போது தொடர்ந்து பொதிகை மலையில் நேற்று மாலையில் இருந்து மழை பொழிவு இருப்பதால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகின்றது. 

    சாரல் மழையுடன், குளிர்ந்த காற்றும் வீசுவதால் மிகவும் ரம்யமான சீசன் தற்போது உள்ளது. கூட்டமும் குறைவாக உள்ளதால் சீசனை அனுபவிக்க இன்றே குற்றாலம் கிளம்புங்கள்...

  • Super Sunday in Kutralam - Good Water Flow, Superb Season, Over Crowded

    இன்று (17.6.2018) ஞாயிறு வார விடுமுறையுடன் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சீசனை அனுபவித்து, அருவிகளில்  உற்சாகமாக குளித்தனர். எல்லா அருவிகளிலும் நன்றாக நீர் வரத்து உள்ளது. அவ்வப்போது சாரல் மழையுடன், பலத்த காற்றும் வீசுகிறது.

    அதிகமான கூட்டம் காரணமாக அனைத்து அருவிகளிலும் மக்கள் வெள்ளம் உள்ளது. குற்றாலத்தின் அனைத்து முக்கிய வீதிகளும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. திங்கள்கிழமை கூட்டம் சிறிது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Today (10.6.2018) is the best day of this Season

    மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் இன்று (10.6.2018) மிக அதிகமாக தண்ணீர் விழுகிறது. அவ்வப்போது மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. நேற்று போல் இல்லாமல் இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்றுதான் இந்த சீசனின் மிகவும் சிறந்த நாள் என்றால் மிகையாகாது.

Page 3 of 4