Kutralam Live

the Spa of South India...
  • Today (11.6.2018) Night bath in Main Falls is Free from Crowd

    இன்று (11.6.2018) இரவு மெயின் அருவியில் அருமையான குளியல் போட்ட சுற்றுலா பயணிகள் - கூட்டம் குறைவாக உள்ளது, அருமையான சீசனுடன், அவ்வப்போது மழையும் சாரலும், பலத்த காற்றும். சீசன் சூப்பர்...

  • Today (14.8.2018) Flood in Old Falls

    இன்று (14.8.2018) பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது எடுத்த படம்.

    நன்றி: தென்காசி டைம்ஸ்

  • Today (15.7.18) Bathing Banned in Old Falls, Main Falls & Five Falls

    தொடர்ந்து பெய்யும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (15.7.2018) பழைய குற்றால அருவி, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சிற்றருவியிலும், புலி அருவியில் மட்டும் குளிக்க அனுமதி உண்டு.

     

  • Today (18.8.2018) Old Falls Flood Video

    இன்று (18.8.2018) பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி...

    காணொளிக்கு நன்றி: தென்காசி டைம்ஸ்

  • Today (30.7.2018) Rain in Kutralam

    ஒரு வார இடைவேளைக்கு பிறகு இப்போது (30.7.2018, 2.15 PM) குற்றாலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

  • Today (7.10.2018) Good Water Flow with Minimum Sunday Crowd in Five Falls

    இன்று (7.10.2018) ஐந்தருவியில், பொதிகையில் பெய்த மழை காரணமாக நன்றாக நீர் விழுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் குறைவான கூட்டத்தில் ஆனந்தக் குளியல் போடுகின்றனர்.

  • Today Evening (11.7.2018, 5.00 PM) - Bathing Banned in Main Falls

    இன்று மாலை (11.7.2018, 5.00 PM) பொதிகை மலையில் பெய்த மழையால் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் குளிக்க தடை இல்லை.

     

  • Tonight (20.6.2018) - Enjoy Night Bath in Mainfalls with Drizzles

    மெயின் அருவியில் இன்றைய (20.6.2018) இரவு நேரக்குளியலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சுற்றுலா பயணிகள். 

    அருமையான சாரலுடன், அதிக நீர்வரத்தும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    Come & Enjoy the Night Bath in Main Falls...

  • Traffic Jam Today (24.6.2018) in all Roads & Falls in Kutralam

    வார விடுமுறையை முன்னிட்டு இன்று (24.6.2018) குற்றாலம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. முக்கிய வீதிகள் மற்றும் அனைத்து அருவிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அருவிகளிலும் நீர்வரத்து அதிகம் இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருப்பதினால் குளிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது.

  • Video - Flood in Main falls on 14.4.2018 & 30.7.2017

    14.4.2018 அன்று மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளம்.

  • Video - Flood in Thiruparappu Falls (15.8.2018)

    கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் இன்று (15.8.2018) ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி.

  • Video - Idukki Dam Overflowing after 26 years

    கேரளாவில் உள்ள இடுக்கி அணை தனது முழு கொள்ளளவான 170 மீட்டரை அடைந்ததால் திறந்து விடப்படுகிறது. இதற்கு முன்னர் 1992ல் திறந்துவிடப்பட்டது. 18 வருடங்களுக்குப்பிறகு இப்போது திறந்துவிடப்படுகின்றது. அதன் காணொளி இங்கே...

    நன்றி: தென்காசி டைம்ஸ்.

  • Video - Main Falls Flood Today (15.8.2018)

    இன்று (15.8.2018) மெயின் அருவியின் வெள்ளப்பெருக்கு காணொளி.

    நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்.

  • Video - Main Falls in Full Flow (17.7.2018)

    அதிக நீர் வரத்துடன் இன்றைய (17.7.2018) மெயின் அருவி காணொளி.

  • Video - Main Falls in Full Flow (9.6.2018)

    குற்றாலம் மெயின் அருவி வெள்ளம் - இன்று (9.6.2018) மெயின் அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காணொளி.

  • Video - Main Falls in Full Flow Today (10.7.2018)

    இன்றைய (10.7.2018) மெயின் அருவியின் காணொளி...

  • Video - Sabarimalai Niraputhari Poojai

    நிரபுத்தரி பூஜை - உயிரை பணயம் வைத்து சபரிமலை சென்ற இளைஞர்கள்...

     

    "நிரபுத்தரி" என்னும் ஆண்டுற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன் , யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

    கோவிலுக்கு நெல் கதிர் கொண்டு போவதற்கு உள்ள அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டதாலும் , காட்டாற்று.வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலை ப்ரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்னும் சூழ்நிலையில்...

    ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி என்னும் 4 இளைஞர்கள் இந்த நெற்கதிர் கொண்டுவரும் பொறுப்பு ஏற்று, தங்கள் உயிரைப் பணையம் வைத்து , காட்டாற்று வெள்ளமாக , மரங்களும் மற்றும் பாம்புகள் என பலவும் அடித்து செல்லும், கரை புரண்டு ஓடும் பம்பையாற்றை , பல அணைகள் நிரம்பி வழிந்து , பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில் , யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து , பெரும் சாகசமாக நீந்திக் கடந்து , அக்கரை சேர்ந்து குறித்த நேரத்தில் சபரிமலை கோயில் சடங்கு நடைபெறும்படி கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

    ( அந்த 4 இளைஞர்களின் நம்பிக்கைக்கு ஸ்ரீ ஐயப்பன் உடன் இருந்து அருள் செய்து காத்திருக்கிறார் )

    இத்தனை சிரமங்களுடன் ஆற்றை கடந்த பின், சாலை வழியாக டிராக்டரில் இந்த மூட்டையை கொண்டு செல்லலாம் என்றால் அதுவும் இயலவில்லை. மரங்கள் சரிந்து, விழுந்து கிடந்ததால் சாலை வழியாக ட்ராக்டரில் கொண்டு செல்ல இயலவில்லை.

    இதுபோன்ற பல தடைகள், கால தாமதத்தால்,
    குறிப்பிட்ட நேரத்தில் சடங்குகள் நடை பெறுமா என்ற நிலையில்,
    ( உயிரை துச்சமென மதித்து நம்பிக்கையுடன் தெய்வ கைங்கர்யம் செய்த பக்தர்கள்பால் ஸ்ரீ அய்யப்பன் கொண்ட கருணையால் ) பல
    பெரும் சிரமங்களை கடந்து குறித்த நேரத்தில் கோவிலின் சடங்குகள் நேற்று நடை பெற்றது.

    காலையில் சங்கு ஊதும் இரு ஊழியர்கள் வர இயலவில்லை.

    ஆந்திரா, தமிழ்நாடு, கர்னாடகா , கேரளா போன்ற பல இடங்களிலிருந்து ஏராளமாக வந்திருந்த பக்தர்கள் எர்மேலி, பத்தினம்தட்டா போன்ற இடங்களில் கேரள அரசால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும் அசம்பாவிதங்கள், தவிர்க்கவே...

    எனவே, சபரிமலை சரித்திரத்தில் முதல் முறையாக பக்தர்கள் யாருமே இல்லாமல் சடங்குகள் , பூஜைகள் நேற்று நடைபெற்றன.

    காணொளி : தென்காசி டைம்ஸ் - நன்றி!

  • Video - Tenmala Dam Overflows Today (10.8.2018)

    செங்கோட்டை அருகில் கேரளாவில் உள்ள தென்மலை அணை இன்று (10.8.2018) நிரம்பி வழியும் காணொளி.

    நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்.

  • Video - Today (18.8.2018) Main Falls Flood upto 1st Bridge

    இன்று (18.8.2018) மெயின் அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக முதல் பாலம் வரை நீர் விழுகிறது. அதன் காணொளிகள்...

    காணொளிக்கு நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன் & தென்காசி டைம்ஸ்

Page 4 of 4