Kutralam Live

the Spa of South India...
 • Cottages for daily rent

  குற்றாலத்தில் தினசரி வாடகைக்கு காட்டேஜ் கிடைக்கும். சுத்தமான, தரமான அறைகள், சமையல் வசதியுடன். மூன்று அறைகள் கொண்ட காட்டேஜ்.

  தேவைக்கு தொடர்பு கொள்ளவும் : Contact Us

 • Dense Clouds in Pothigai

  குற்றாலத்தில் நிலவும் இதமான குளிர் காற்று மற்றும் கரு மேகங்கள்...
  கடந்த சில தினங்களாக பொதிகை மலை முழுவதும் நல்ல அடர்ந்த மேகக்கூட்டங்கள் காணப்படுகின்றது. இம் மேகக்கூட்டங்களால் பொதிகை மலையில் மழை பெய்து அது நமக்கு அருவிகளில் மூலிகை கலந்த நீராக விழுகிறது. அந்த வீடியோ பதிவு கீழே...

 • Dhoni In Kutralam

  திருநெல்வேலிக்கு வந்த கேப்டன் தோனி இன்று குற்றாலம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான அருவிக்கு வருகை புரிந்தார்.

  நன்றி: தென்காசி டைம்ஸ் & மெயின்அருவி தெனாலி ராமன்.

 • Drizzles, Less Crowd, Good Water Flow - Total Enjoyment Today (23.7.2018)

  அருமையான சாரல் மழை, குறைந்த கூட்டம், பலத்த காற்று, நல்ல தண்ணீர் வரத்துடன் இன்றைய (23.7.2018) குற்றால சீசன் மிகவும் அருமை.

 • Due to Flood, Bathing Banned in Old Falls (11.7.2018, 6.00 PM)

  நீர் வரத்து அதிகரித்ததால் பழைய குற்றால அருவியிலும் தற்போது (11.7.2018, 6.00 PM) குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • Eating Ghee Halwa after a Bath

  மெயின் அருவியில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு சன்னதி பஜாரில் வரும்போது நெய் அல்வா சாப்பிட்டதுண்டா?

  அருமையான சுவையுடன், சுடச்சுட நெய் அல்வா, அதனுடன் அவர்கள் தரும் கார வகைகள் சாப்பிடும்போது...ஆஸம்....

   

 • Enjoy this Long Weekend at Kutralam

  சீசன் மிகவும் அருமை: குளுமையான சீதோஷ்ணநிலை, அவ்வப்போது மழை அல்லது சாரல், நல்ல காற்று மற்றும் அருவிகளில் அதிகளவு தண்ணீர். இப்போது உள்ள இந்த அருமையான குற்றால சீசனை அனுபவிக்க இதை விட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது.​ இந்த மூன்று நாள் வார விடுமுறையை குற்றாலத்தில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.

 • Enjoy Tonight (30.7.2018, 8.30 PM) : Good Water Flow, Drizzles & Less Crowd.

  இன்று (30.7.2018) பிற்பகல் முதல் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவியில் மாலை சிறிது நேர தடைக்குப் பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

  அதிக நீர் வரத்துடன், சாரல் மழை மற்றும் குறைந்த கூட்டம் என்று தற்போது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

 • Evening Bath in Main Falls Today is Free from Crowd (27.7.2018)

  இன்று (27.7.2018) மாலை மெயின் அருவியில் நல்ல நீர்வரத்துடன் கூட்டம் இல்லா நிம்மதியான குளியல்.

 • Evening in Fivefalls - Pleasant with Good Rain

  இன்று (19.6.2018) மாலை பெய்த மழையால் ஐந்தருவி குளியல் சூப்பர் - ஓரளவு கூட்டம் இருந்தாலும், நீர் வரத்து நன்றாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

 • Five Falls Live (Currently Offline)

  The above video is a Time Lapse Video showing the last 6 hours images of Five Falls. Please see the time stamped at the right top corner of the image to check exact time of the image. Sometimes the images may not be uploaded due to unavailability of Internet or Power.

 • Flood Continues in Main Falls & Five Falls Today (9.8.2018)

  தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் இன்றும் (9.8.2018) மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளது. ஆதலால் இன்றும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • Flood Video - Main Falls & Five Falls (16.7.2018)

  இன்று (16.7.2018) மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி காட்சிகள்.

  நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்

 • Forest Falls near Kaattalagar Kovil, Shenbathoppu

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பத்தோப்பில் இருந்து காட்டழகர் கோவில் செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் அருவி.

 • From the top of Main Falls

  மெயின் அருவியின் மேல் இருந்து பார்க்கும்போது குற்றாலத்தின் அழகு நம்மை சொர்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

  மேலும் குற்றாலநாதர் கோவிலின் சங்கு வடிவ அமைப்பையும் அங்கிருந்து காணலாம். வருடத்தின் சில நாட்கள் மட்டும் (சித்ரா பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில்) செண்பக தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் நாம் அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதி உண்டு.

 • Good Water Flow & Less Crowd Today (22.8.2018)

  இன்று (22.8.2018) குற்றால அருவிகளில் நீர்வரத்து நன்றாக உள்ளது. அரசு விடுமுறை தினம் என்றாலும் கூட்டம் குறைவாகவே உள்ளது. எல்லா அருவிகளிலும் குளிக்க அனுமதி உண்டு.

 • Good Water Flow in Main & Five Falls Tonight (17.05.2019)

  இன்று மாலை பெய்த மழை காரணமாக (17.05.2019) மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நல்ல நீர் வரத்து.

 • Good Water Flow in Old Falls (11.11.2018)

  இன்று (11.11.2018) பழைய குற்றால அருவியில் நல்ல நீர் வரத்து உள்ளது. கூட்டமும் குறைவாகவே உள்ளது.

 • GUNDARU FALLS

  குண்டாறு அருவி - குற்றாலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது குண்டாறு அருவி.

  செல்லும் வழியெங்கும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கின்றது. குண்டாறு அணையில் உள்ளே இரண்டு கிலோமீட்டர் சென்றால் குண்டாறு அருவியை அடையலாம். அருவிக்கு செல்லும் பதை சற்று கடினமாக பாறைகளாக உள்ளதால் வாகனங்களில் செல்லாமல் ஜீப் மூலமோ அல்லது நடந்து செல்வதோ நல்லது. அங்கு கடைகள் எதுவும் இல்லாததால் செல்லும்போது உணவுகளும் தண்ணீரும் எடுத்துச்செல்வது உகந்தது. ஆனால் அங்கே சில மீன் பொரித்து தரும் கடைகள் மட்டும் உள்ளன. குண்டாறு அணையில் படகு சவாரியும் உள்ளது. நபருக்கு ரூ.20 வசூல் செய்கின்றனர். அணைப்பகுதியில் சிறிய பூங்கா ஒன்றில் சிறுவர்களை மகிழ்விக்கும் சில விளையாட்டு சாதனைகளும் உள்ளது.