Kutralam Live

the Spa of South India...
 • Heathy Fruits of Kutralam

  குற்றாலத்தில் குவியும் மருத்துவ குணம் நிறைந்த பழ வகைகள்.

  குற்றாலம் வரும் சுகவாசிகளின் ஷாப்பிங் லிஸ்டில் முதல் இடம் பெறுவது சீசன் தோறும் குவியும் அரிய மருத்துவ குணங்கள் நிறந்த பழங்களான மங்குஸ்தான், ரம்டன், துரியன், ராமர் சீதா பழம், முட்டை பழம், பட்டர் புருட் என அடுக்கி கொண்டே போகலாம். அருவிக்கு செல்லும் வழியெங்கும் நம் கண்ணை வியக்க வைக்கும் அழகுடைய பழக் கடைகள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள். அனைத்து பழ வகைகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகிற நிதர்சனமான உண்மை. அனைவரும் கண்ணை மூடி ஒட்டு மொத்தமாக பழத்தை வீட்டுக்கு வாங்கி செல்லுதலே நமக்கு புரிகிறது.

  உடலுக்கு குளிர்ச்சியை தருகிற மங்குஸ்தான் தற்போது கிலோ 200 க்கு விற்கப்படுகிறது .

  இனிப்பும், புளிப்பும் உடைய, உடலுக்கு வைட்டமின் சி சத்து தருகிற ரம்டன் பழம் கிலோ 200 க்கு விற்கப்படுகிறது.

  மலச்சிக்கலை போக்கும் நார் சத்துள்ள முட்டை பழம் கிலோ 140 க்கும், ஸ்டார் புருட் கிலோ 120 க்கும் விற்கப்படுகிறது

  குழந்தை வரம் தருகிற துரியன் பழம் கிலோ 500 க்கு விற்கப்படுகிறது.

 • Heavy Water Flow in Main & Five Falls

  நேற்று இரவு பெய்த மழையால் இன்று (9.6.2018) மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர் வரத்து மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. நீர் வரத்து குறையும் வரை இரண்டு அருவிகளிலும் சிறிது நேரத்திற்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • High Water Flow, Bathing Banned in Main Falls (9.7.2018, 7.15 PM)

  மெயின் அருவியில் தற்போது (9.7.2018, 7.15 PM) நீர் வரத்து அதிகமானதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • Hot Coffee & Tea in Kutralam

  குற்றாலத்தில் அருவிகளில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நடத்தும் காபி நிலையங்களில் சூடான, சுவையான, நல்ல மணத்துடன்  காபி அல்லது டீ குடிப்பது தனி சுகம்தான். அங்கே கிடைக்கும் பால் கோவா முதலிய இதர பால் பொருட்களும் மிகவும் நன்றாக இருக்கும். குற்றாலத்தின் முக்கிய வீதிகளில் நீங்கள் இந்த கடைகளை காணலாம்.

 • Hotel Akshaya (Udupi)

  ஹோட்டல் அக்க்ஷயா (உடுப்பி)

  ஹோட்டல் அக்க்ஷயா (உடுப்பி) - உயர்தர சைவ உணவகம் மெயின் அருவி அருகில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

 • Hotel Rajasthan

  ஹோட்டல் ராஜஸ்தான்:

  தென்காசி குற்றாலம் சாலையில் பராசக்தி கல்லூரி அருகில் உள்ளது. இங்கு வட இந்திய சைவ உணவு வகைகள் கிடைக்கும். பாம்பே மீல்ஸ் சாப்பிட மிக சிறந்த இடம்.

 • Hotel Sri Murugan Veg

  ஹோட்டல் ஸ்ரீ முருகன் (சைவம்)

  ஹோட்டல் ஸ்ரீ முருகன் குற்றாலத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது ஒரு சைவ உணவகம். விசாலமான பார்க்கிங் வசதி உண்டு.

 • Hotel Tamilnadu

  ஹோட்டல் தமிழ்நாடு :

  ஹோட்டல் தமிழ்நாடு தென்காசி குற்றாலம் சாலையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனம்.

   

 • ILANJI MURUGAN TEMPLE

  இலஞ்சி குமாரர் கோயில்

  தென்மாவட்டங்களில மிகவும் புகழ்பெற்று விளங்குவது தென்காசி வட்டத்தில் அமைந்துள்ள இலஞ்சி குமாரர் கோயில் ஆகும்.

  குமாரர் கோயிலில் தினமும் திருவனந்தல் விழா பூஜை, காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை, அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜை நடக்கின்றது. மேலும் ஐப்பசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, மாசிமாதம் நாள் கதிர் திருவிழா, சித்திரை விசு, வைகாசி விசாகம் போன்ற விஷேச நாட்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் இவ்விழாக்களின் போது அலைமோதி காணப்படும். அகஸ்திய முனிவர், அருணகிரி நாதர் வழிபட்டு சென்றதாக புராண நூல்கள் கூறுகின்றன. கடந்த 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதல் கவர்னராகிய மேதகு கிருஷ்ணசிங் (பவநகர் மஹாராஜா) குமார கடவுளை வழிபட்டு இயற்கை அன்னையின் வனப்பை கண்டு வியந்து சென்றிருக்கிறார். இதே ஆண்டு டிசம்பர் மாதம் திருவாடுதுறை ஆதீனம் 20வது பட்டம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், 1951ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தருமபுரம் ஆதீனம் 25வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் மற்றும் பத்மானாபுரம் மகாராஜா முதல் குறுநில மன்னர்கள் வரை இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள்.

 • Important Notes to Tourists

  நட்புக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓர் அறிவிப்பு:

  சீசன் நல்லாருக்கும் போதே லீவு போட்டுனாலும் வந்துட்டு போயிருங்க!

  நீங்க வரும்போது சீசன் இல்லையேனு வருத்தப்படாதீங்க!

  சனி, ஞாயிறு வராதீங்க வந்தால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் தான் மிஞ்சும்!

  முடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது!

  தங்க நகைகள் அணிந்து குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள் முடியாத போது திருக்குகளை சரி செய்து கவனமாக குளித்திடுங்கள்!

  டூர் தான வந்துருக்கோம்னு சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தாதீர்கள் அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்!

  வாகனங்களில் வருபவர்கள் கண்ட இடங்களில் வண்டியை நிறுத்தாதீர்கள் உங்களால் தான் மொத்த நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது!

  உங்கள் ஊரில் நீங்கள் பெரிய "லார்டு லபக்காக" இருக்கலாம் அந்த தோரணையை இங்கு வந்து காட்டி பிரச்சினை செய்ய வேண்டாம்.

  போலீசை எதிர்த்து பேசி அவர்களுடன் சண்டையிடுவது உங்களின் பண அதிகார மமதையை அவர்களிடம் காட்டும் செயல்களை அறவே தவிர்த்திடுங்கள்!

  போதையில் பெண்களை தொடுவது பாலியல் ரீதியாக பேசுவது அருவருக்கத்தக்க கமெண்ட்களை பேசுவதை தவிருங்கள்!

  இன்று நாம் வர்ணித்தால் நமது குடும்பத்தினரை எவனாவது வர்ணிப்பான்!

  இறைவன் கொடுத்த இயற்கையை ரசித்து கடந்து செல்லுங்கள்!

  நாம் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் அருவில தண்ணியே வரக்கூடாது இருந்தாலும் இவ்வளவாச்சும் வருதேனு சந்தோசப்பட்டுக்கோங்க!!

  இயற்கையே மேலானது!

  இயற்கையை நாம் சீண்டினால்
  இயற்கை நம்மை தீண்டிவிடும்!


  நன்றி: மெயினருவி தெனாலிராமன் மற்றும் குற்றாலம் நலம் விரும்பிகள்.

 • Increase in Water Flow by Evening (24.7.2018, 5.30 PM)

  பொதிகை மலையில் பெய்த மழையால் இன்று மாலை (24.7.2018, 5.30 PM) முதல் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

 • Increase in Water Flow due to Regular Drizzles

  இன்று (7.8.2018) காலை முதல் பெய்து வரும் சாரல் மழையால் தற்போது அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கூட்டமும் குறைவாக உள்ளது.

 • Indian Oil Petrol Bulk, Kutralam

  இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம், குற்றாலம்:

  இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் மாநில நெடுஞ்சாலையில் குற்றாலம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது.

 • Indian Overseas Bank ATM

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்: 

  இந்த ஏ.டி.எம் குற்றாலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது.

 • Information for Sabarimalai Pilgrims

  சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு -

  சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181
  இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.

  முக்கியமான சில தொலைபேசி எண்கள்:

  S T D code : 04735

  தேவசம் போா்டு கம்மிஸ்ணா்
  04735202004

  விஜிலன்ஸ் S.P 04735202081

  விஜிலன்ஸ் அலுவலகம்
  04735202058

  தகவல் தொடர்பு மையம் சபரிமலை
  04735202048

  தகவல் தொடர்பு மையம் பம்பை
  04735202339

  தபால் நிலையம் சபரிமலை
  04735 202130

  தபால் நிலையம் பம்பை
  04735202330

  காவல் நிலையம் சபரிமலை
  04735202014
  04735202016

  காவல் நிலையம் பம்பை
  04735203419
  04735203386

  போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
  04735202029

  போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
  04735203523

  போலீஸ் வயர்லெஸ்
  04735202079

  தீயணைப்புத் துறை சபரிமலை
  04735202033

  കെ. എസ്. ആർ. ടി. സി പമ്പ
  K S R T C பம்பை
  04735203445

  வனத்துறை பம்பை
  04735202335
  04735202074

  அரசு மருத்துவமனை பம்பை
  04735203318

  அரசு மருத்துவமனை சபரிமலை
  04735202101

  Telephone Exchange சபரிமலை
  04735202199
  04735202000
  04735202836.

  சுவாமியே சரணம் ஐயப்பா!!!

 • Kokarakko Briyani Centre

  கொக்கரக்கோ பிரியாணி சென்டர்:

  தென்காசி குற்றாலம் சாலையில், தென்காசியில் அமைந்துள்ளது. மிகவும் சுவையான பிரியாணி இங்கு கிடைக்கும்.

 • KUMBAVURUTI FALLS

  கும்பாவுருட்டி அருவி - குற்றாலத்திலிருந்து 32 km தொலைவில், செங்கோட்டையை அடுத்து கேரளாவில் உள்ள அச்சன்கோவில் செல்லும் பாதையில் உள்ளது.மேக்கரை வழியாக அச்சன்கோவில் செல்லும் எழில்மிகு அடர் வன பகுதியில், கொண்டை ஊசி வளைவில் பயணித்தால் அருவியை அடையலாம். செங்கோட்டையிலிருந்து ஓரிரு கேரளா அரசு பஸ்கள் அச்சன்கோவிலுக்கு இயக்கப் படுகின்றன. அந்த பஸ் மூலம் அருவியை அடையலாம். எனினும் கும்பாவுருட்டி அருவிக்குச் செல்ல தனியே வாகனம் இருந்தால் வசதியாக இருக்கும். கேரளா வனத்துறை கட்டுபாட்டில் உள்ள அருவிக்கு செல்ல நபர் ஒருவர்க்கு தலா ரூபாய் 25 வசூலிக்கப் படுகிறது. கார்களுக்கு பார்கிங் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வரும் வாகனங்களுக்கு கேரளா பெர்மிட் அவசியம். கார் பார்க்கிங்கில் சாப்பிடுவதர்க்கு ஏற்ற வகையில் ஒரு ஹோட்டல் மட்டும் உள்ளது,அங்கு புரோட்டாவும்,கடலை கறியும்,பொரித்த மீனும் ,அவித்த முட்டையும் கிடைக்கும்.அந்த காட்டு பகுதியில் குளித்து விட்டு வரும்போது,பசியில் ஒரு கட்டு கட்டலாம். குற்றாலம் வரும் உங்களை கும்பாவுருட்டி கொண்டை ஊசி வளைவுப் பாதைகளும், அடர் வனப்பகுதியும் இந்த கேரள மலைப்பாதை உங்கள் பயணத்தை மேலும் உற்சாகப்படுத்த போவது உறுதி..

  தற்போது இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

 • Kutralam Eco Park

  சுற்றுச்சூழல் பூங்கா - குற்றாலத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை 1959-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை தற்போது தோட்டக்கலைத் துறையினரால் தரம் உயர்த்தப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இது ஐந்தருவிக்கு அருகில் உள்ளது.
  நீரூற்றுகள், சிற்பங்கள், புல் தரைகள், மலைப்பகுதி, 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் வகையில் நடை பாதை, சிறுவர் பூங்கா, நறுமண தோட்டம், மலர் வனம், சாகச விளையாட்டுத் திடல், பசுமை குடில் போன்ற 22 வகையான சிறப்பம்சங்களை உள்ளடக்கியது எக்கோ பார்க்.

 • KUTRALANATHAR TEMPLE

  அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்

  கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது

  சிவஸ்தலம் பெயர் : குற்றாலம்

  இறைவன் பெயர் : குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர்.

  இறைவி பெயர் : குழல்வாய் மொழியம்மை

  பதிகம் சம்பந்தர் - 2

  ஆலய முகவரி :

  அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்

  குற்றாலம் அஞ்சல்

  திருநெல்வேலி மாவட்டம்

  PIN - 627802

  தல புராண வரலாறு:

  கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

  கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்பவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

  கோவில் அமைப்பு:

  கோயில் மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000 அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5 ஏக்கர் திலபரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்று அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது. மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், நன்னகரப்பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன.

  இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம்.

 • Kutralanathar Temple Margazhi Festival

  திருக்குற்றாலநாதர் திருக்கோயில் மார்கழி திருவிழா.
  திருக்குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோயில் 2−1−18 அதிகாலை 4−00மணிக்கு சித்திரைசபையில் நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை
  5.00 மணிக்கு திரிகூட மண்டபத்தில் நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.