Kutralam Live

the Spa of South India...
 • Lakshmi Vilas Bank ATM, Kutralam

  லட்சுமி விலாஸ் பேங்க் ஏ.டி.எம்:
  மெயின் அருவி அருகில், மாநில நெடுஞ்சாலையில் ஹோட்டல் குறிஞ்சி அருகில் அமைந்துள்ளது லட்சுமி விலாஸ் பேங்க் ஏ.டி.எம்.

 • Late Night Bathing in Water Falls

  குற்றாலத்தில் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இரவு பகல் என்ற வித்தியாசம் கிடையாது.
  ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் குளிக்க முடியுமா?
  குளிப்பதருக்கு பாதுகாப்பாக விளக்குகள் எரியுமா? மக்கள் குளிப்பார்களா? பாதுகாப்பு உள்ளதா? என்ற ஒரு வினா இருக்கத்தான் செய்கிறது. அருவியில் குளியல் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இருபத்திநாலு மணி நேரமும் அருவியில் மக்கள் கூட்டம். ஆணும் பெண்ணும் குளித்து கொண்டுதான் இருப்பார்கள். குளியலுக்கு ஏற்றது பகலா? இரவா? என்ற ஒரு பட்டிமன்ற தலைப்பு வைத்தால், இரவு தான் என்று முக்கால் வாசி மக்கள் சொல்லுவார்கள். பகல் பொழுதை விட இரவு நேர குளியல் சுகமான தூக்கத்தை தரும், களைப்பையும் போக்கும். பகலை விட கூட்டம் இல்லாத அருவி, வருடம் தோறும் இரவு நேரத்தில் பகல் போன்று ஆக்கும் பிரகாசமாக எரியும் ஹலோஜன் பல்புகள், பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருக்கும்போது இரவு நேர குளியல் பயம் இல்லாத இனிமையான குளியல்தான்.

 • Leopard in Top of Main Falls (23.2.2019)

  சனிக்கிழமை (23.2.2019) அன்று குற்றாலம் மெயின் அருவி கார் பார்க்கிங் ஏரியா மேல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மலையில் நீர் இல்லாமல் இருப்பதால் நீர் அருந்த வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சென்ற வாரமும் இரண்டு சிறுத்தைகளை மக்கள் கண்டதாக கூறுகின்றனர்.

 • Main & Five Falls Still Flooding (9.6.2018 6.00 PM)

  மெயின் அருவியிலும் ஐந்தருவியிலும் இன்னும் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் குளிக்க தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

  கேரளாவில் பாலருவியில் குளிக்க அனுமதி உண்டு. கும்பாவுருட்டி அருவியில் இன்று அனுமதி இல்லை.

  இன்னும் விட்டு விட்டு மழையும், பலத்த காற்றும் தொடர்கிறது. சீசன் மிகவும் அருமையாக உள்ளது.

 • Main Falls

  பேரருவி (மெயின் அருவி) - குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது
  இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.

 • Main Falls Flood Video - 16.8.2018

  இன்றைய (16.8.2018) மெயின் அருவி வெள்ளப்பெருக்கு காணொளி.

  நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்

 • Main Falls Live (Currently Offline)

  மெயின் அருவியின் நேரடி ஒளிபரப்பு. தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை...

 • Main Falls Video 29.5.2018

  Video of Main Falls water flow on 29.5.2018.

 • Manimutharu Falls

  மணிமுத்தாறு அருவி - குற்றாலத்திலிருந்து 50 KM தொலைவில் உள்ளது மணிமுத்தாறு அருவி. நெல்லை மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாறின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. வனத்துறையினரின் அனுமதி பெற்று இந்த அருவிக்கு செல்லலாம்.

 • Massive Rain Will Continue Today (15.8.2018) - IMD Weather Report

  மேற்கு தொடர்ச்சி மலையில் இன்றும் (15.8.2018) கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆதலால் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு தொடரும் எனத் தெரிகிறது.

 • Maurya Veg Restaurant

  மௌரியா சைவ உணவகம்

  குற்றாலம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது இந்த சைவ உணவகம்.

 • Nanban Iyappan Hotel

  நண்பன் ஐயப்பன் ஹோட்டல்

  மெயின் அருவி அருகே சன்னதி பஜாரில் அமைந்துள்ளது நண்பன் ஐயப்பன் ஹோட்டல். உயர்தரமான சைவ உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.

 • Nearest Airports

  Kutralam is connected by several International & Domestic Airports.

  International Airports:

  Madurai (IXM) - 160 KM (3.30 hours drive)

  Trivandrum (TRV) - 121 KM (3.30 hours drive)

  Kochi (COK) - 208 KM (6 hours drive)

   

  Domestic Airport:

  Tuticorin (TCR) - 110 KM (2.30 hours drive)

 • Old Falls Flood Update (16.7.2018) - Video & Image

  இன்று (16.7.2018) பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி மற்றும் படம்.

  நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்

 • Old Falls Season Today (12.7.2018)

  இன்றைய (12.7.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்: 

  நல்ல நீர் வரத்து, சாரல், சுமாரான கூட்டம்.

 • Old Falls Season Update (18.6.2018)

  இன்றைய (18.6.2018)  பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்...

 • Old Falls Season Update (19.6.2018)

  இன்றைய (19.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்.

  நல்ல நேர் வரத்து, குறைந்த கூட்டம்.

 • Old Falls Season Update (21.7.2018)

  இன்றைய (21.7.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்:

  நல்ல நீர் வரத்து, பலத்த காற்று, கூட்டம்.

 • Old Falls Season Update (24.6.2018)

  இன்றைய (24.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம் - நல்ல நீர் வரத்து, வெயில், ஞாயிறு விடுமுறை என்பதால் அதிகமான கூட்டம், போக்குவரத்து நெரிசல்.