Kutralam Live

the Spa of South India...
 • Raj Mess (Veg)

  ராஜ் மெஸ்

  தென்காசியில் 1970 முதல் இந்த சைவ உணவகம் செயல்படுகிறது. உயர்தரமான சைவ உணவு வகைகளுக்கு புகழ் பெற்றது இந்த மெஸ். தென்காசியிலுருந்து குற்றாலம் செல்லும் பாதையின் சிக்னல் அருகில் உள்ளது.

 • Rajaguru Dhakshinamoorthy Temple

  ஸ்ரீ ராஜகுரு யோக தெட்சணா மூர்த்தி மடாலயம். தென்காசியில் இருந்து ஆயிரபேரி செல்லும் வழியில் உள்ள சித்திர நதியின் தென்புறம் அமைந்துள்ளது இத்திருகோயில். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாத செல்வங்களை அள்ளி தருகின்ற ராஜகுருவாக விளகிங்குகின்றார்.

  ராசிகளில் முதன்மையாக விளங்குவது வியாழன் என்று அழைக்கின்ற குரு,நம் மீது பார்வை பட்டால் கோடி நன்மை என்பார்கள்.அப்படிப்பட்ட குரு பகவான் வீற்றிருக்கும் இத்திருகோயிலில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.00 மணி முதல் பிரம்ம முகூர்த்ததில் நடைபெறும் அபிசேகம் மிகவும் பிரசித்தம் பெற்றது. அதன் பிறகு நடைப்பெறும் 5.00 மணிக்கு (சோடச்ச உபச்சாரம் ) தீபாராதனை பார்ப்பதற்க்கு ஆயிரங் கண்கள் வேண்டும். வியாழக்கிழமைகளில் காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை(சோடச்ச உபச்சாரம்), அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜைகள் சிறப்பகாக் நடைப்பெருகின்றது.மாதத்தில் வரும் கடைசி வியாழக்கிழமை அன்று வெள்ளி அங்கி அணிந்து மிகவும் சிறப்பான தோற்றத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு புன்முறுவலுடன் அருள் பாலிக்கிறார். அன்று காலை முதல் மாலை வரை அனனத்து விளக்குகள் ஏற்றப்பட்டு நடைப்பெறும் விளக்கு பூஜைகள் காண அகத்தில் உள்ள இருள்கள் அகலும். இத்திருக்கோயிலை கட்டியவருக்கும்,சிலையை வடித்தவருக்கும், பூஜைகள் செய்த சாது அவர்களுக்கும் முன்று ஜீவசமதிகள் அமைந்திருப்பது கூடுதல் தகவல். வருடம்தோறும் நடைபெறும் குருபெயர்ச்சி பூஜை ஐயப்பா சாது வழி நடத்தலின் படி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. குருஅருள் பெற, வாழ்வில் வெற்றி பெற, எண்ணங்கள் ஈடுயாற ஸ்ரீராஜகுரு யோக தெட்சணா மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி ஒரு முறை தருசித்து விட்டு வாருங்கள்.

 • RR Garden Restaurant

  ஆர்.ஆர். கார்டன் உணவகம்:

  இந்த உணவகம் தென்காசி குற்றாலம் சாலையில், மின் நகரில் அமைந்துள்ளது. இங்கு இந்தியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகள் கிடைக்கும். கார்டன் பகுதி அமைந்துள்ளது இதன் சிறப்பு.

 • Saral Vizha 2017 - Flower Show

  29.7.2017 அன்று நடைபெற்ற சாரல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தோட்டக் கலை சார்பில் நடைபெற்ற மலர் கண்காட்சி.

 • Saral Vizha 2018 inauguration on 28.7.2018

  குற்றாலம் கலைவாணர் அரங்கில் 28.7.2018 மாலை 6.00 மணிக்கு சாரல் விழா 2018 இனிதே துவங்கப்பட்டது. இவ்விழா 4.8.2018 வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.

  நன்றி: தென்காசி டைம்ஸ் & மெயின்அருவி தெனாலி ராமன்.

 • See How the Water Flow Suddenly Changes in Main Falls

  குற்றாலத்தில் எப்போது தண்ணீர் அதிகமாக விழும் என்று கணிப்பது மிகவும் கடினம் என்பதற்கு இன்றைய வெள்ளப்பெருக்கே நல்ல உதாரணம். கீழே உள்ள படத்தில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முன் எடுத்த படங்களின் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

 • SHENBAGADEVI AMMAN TEMPLE

  செண்பக மரங்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்த காட்டில் குடியிருக்கும் தேவிக்கு பெயர்தான் செண்பக தேவி.

  சிற்றருவிக்கு மேல் மூன்று மைல் தூரம் கால் நடையாக நடந்து சென்றால்தான் இக்கோவிலை அடையமுடியும். சித்திரை மதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி அன்று இக்கோவிலில் பூஜை மிக விமர்சையாக கொண்டாடபடுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு அன்று கூடுவார்கள். அன்றிரவு மஞ்சள் மழை பெய்யும் என்ற ஒரு ஐதீகமும் உள்ளது. இது பலரும் கண்கூடாக கண்டதும் ஆகும். தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

 • SHENBAGADEVI FALLS

  செண்பக தேவி அருவி - செண்பக மரங்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்த காட்டில் குடியிருக்கும் தேவிக்கு பெயர்தான் செண்பக தேவி. செண்பகதேவி கோவில் அருகில் இந்த அருவி உள்ளதால் இப்பெயர் வரக் காரணம்.

  சிற்றருவிக்கு மேல் மூன்று மைல் தூரம் கால் நடையாக நடந்து சென்றால்தான் இக்கோவிலை அடையமுடியும். இந்த அருவிக்கு செல்லும் பாதையில் வன உயிரினங்கள் அதிகம் உள்ளதால் இந்த அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சிலநாட்கள் மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்குவர்.

 • Slow Motion Video of Five Falls

  ஐந்தருவியின் SLOW MOTION காணொளி. ஒவ்வொரு துளியும் மிக அருமை.

 • Soap, Shampoo, Plastics, Alcohol Banned in Falls Area

  குற்றாலம் அருவியில் எண்ணெய், சீயக்காய் மற்றும் சோப்பு பயன்படுத்தி குளிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து 37 உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், குற்றாலம் அருவில் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, சீயக்காய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் உடை மற்றும் அறை, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும், கண்காணிப்பு கேமரா, அதிக வெளிச்சம் உள்ள விளக்கு பொருத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்களும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

  திறந்தவெளி, சாலை, கார்களில், மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மதுபானம் குடிப்பவர்களை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்யவும் என்றும் குற்றாலம் பகுதியை, முறையாக பராமரிக்க வேண்டும், அருவி பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள், கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 • Sri Dharma Sastha - Achan Kovil

  அச்சன்கோவில் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது புனலூர் நகரத்தில் இருந்து 80 கி.மீ. வடகிழக்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோயில் புகழ் மிக்க கோயிலாகும்.
  இங்குள்ள அய்யப்பன் கோயிலைப் பரசுராமர் நிறுவியதாகக் கருதுகின்றனர். தனு மாதத்தில் மண்டல பூஜையும், மகர மாதத்தில் ரேவதி பூஜையும் செய்கின்றனர். மண்டல பூஜையின் போது தேரோட்டமும், ரேவதி பூஜையில் புஷ்பாபிஷேகமும் முக்கியமான சடங்குகள். வண்ணமயமான ஆடையும் ஆபரணங்களும் அணிந்து, வாளைக் கையிலேந்திய அய்யப்பனின் சிலை காண்பிக்கப்படும்.

 • Sudden Change in Five Falls Water Flow Today (8.7.2018)

  இன்று (8.7.2018) மாலை ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமானதை காட்டும் புகைப்படம். ஒவ்வொரு நேரத்திலும் நீர் வரத்து எப்படி அதிகமானது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இன்று மாலையில் இப்போது அதிகமாக நீர் விழுகிறது என்று இன்று காலை குற்றாலம் சென்றவர்களிடம் கூறினால் நம்ப மாட்டார்கள்.

 • Super Season @ Kutralam - Don't Miss it

  கடந்த சில தினங்களாக சீசன் சுமாராக இருந்தது அறிந்ததே. ஆனால் தற்போது தொடர்ந்து பொதிகை மலையில் நேற்று மாலையில் இருந்து மழை பொழிவு இருப்பதால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகின்றது. 

  சாரல் மழையுடன், குளிர்ந்த காற்றும் வீசுவதால் மிகவும் ரம்யமான சீசன் தற்போது உள்ளது. கூட்டமும் குறைவாக உள்ளதால் சீசனை அனுபவிக்க இன்றே குற்றாலம் கிளம்புங்கள்...

 • Super Sunday in Kutralam - Good Water Flow, Superb Season, Over Crowded

  இன்று (17.6.2018) ஞாயிறு வார விடுமுறையுடன் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சீசனை அனுபவித்து, அருவிகளில்  உற்சாகமாக குளித்தனர். எல்லா அருவிகளிலும் நன்றாக நீர் வரத்து உள்ளது. அவ்வப்போது சாரல் மழையுடன், பலத்த காற்றும் வீசுகிறது.

  அதிகமான கூட்டம் காரணமாக அனைத்து அருவிகளிலும் மக்கள் வெள்ளம் உள்ளது. குற்றாலத்தின் அனைத்து முக்கிய வீதிகளும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. திங்கள்கிழமை கூட்டம் சிறிது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • TENKASI KASIVISWANATHAR TEMPLE

  காசிவிஸ்வநாதர் கோவில்

  முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார்.

  பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வணத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளித் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தை காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.

  திருப்பணிகள்:

  கி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது.

  இராஜகோபுரம்:

  கி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.

  கோபுர அமைப்பு:

  உயரம்: 175 அடி 9 நிலை

  நீளம்: வடக்கு - தெற்க்கு -110 அடி

  அகலம்: கிழக்கு-மேற்க்கு- 84 அடி

  மொட்டைக் கோபுரம்:

  கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு

  1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.

  சிறப்பு:

  ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்.

  பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும்,8 திருமடங்களையும் அமைத்தார்.

  விநாயகர்கோயில்கள்

  கன்னிசுதன் (கன்னிதிசை)

 • Thennamara Hotel

  தென்னைமர ஹோட்டல்:

  மெயின் அருவி அருகில் குற்றாலம் வடக்கு சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

 • THIRUMALAI MURUGAN TEMPLE

  திருமலை கோவில்

  திருமலை கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில்

  பண்பொழி என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.

  இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் 'திருமலை' என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.

  குற்றாலம் சென்று குளிக்கச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டால் உடனே பதில் வந்துவிடும்... எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள், பக்கத்தில் இருந்துகொண்டு குற்றாலம் போகாமல் இருப்போமா? என்று! அடுத்தது, குளிப்பதற்காகவும் சாரலை அனுபவிப்பதற்காகவும் மட்டுமே அங்குச் சென்றிருப்பீர்கள்... சரி, அங்குள்ள புனிதமான திருத்தலங்களைச் சென்று தரிசித்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டால், பலரும் இசைவான பதிலைத் தரமாட்டார்கள். ஆனால், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையும், குற்றால நாதர் கோயிலும் தவிர இன்னும் பல திவ்வியத் தலங்கள் சுற்றிலும் உள்ளன. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இது குற்றாலம் - செங்கோட்டை- பண்பொழி மார்க்கத்தில் குற்றாலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  பொதிகை மலையின் ரம்மியமான அழகையும் மலையேறிச் செல்லும் நிம்மதியையும் விரும்புவோருக்கு அருமையான இடம் இந்தத் தலம். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் சுகமான இடம் இந்தத் திருமலைக்கோயில். இங்குள்ள முருகப் பெருமான், பால முருகனாக கையில் வேலோடும், மயிலோடும் காட்சி தருகிறான். மிகப் பிரமாண்டமான கோயில். படிகளில் ஏறிச் செல்லுகையில், அங்கங்கே ஓய்வெடுக்க அழகான மண்டபங்களைக் கட்டி வைத்துள்ளார்கள் பக்தர்கள் பலர். சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

   

  செல்வதற்கு அழகான மிதமான படிகள், ஓய்வெடுக்க மண்டபங்கள் என வயதானவரும் கூட வந்து தரிசிக்கும் வண்ணம் திகழும் இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் பேரழகின் பிம்பமாய் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்கள், வலது முன் கை அபய ஹஸ்தமாக உற்ற துணை நானே என்று அருகில் அழைத்து அருள் மழை பொழியும் சங்கதியைச் சொல்லுகிறது. வலது பக்க பின் கை வஜ்ராயுதம் தாங்கி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன இந்தத் திருவுருவம் இங்கு வந்த கதை சுவாரஸ்யமான ஒன்று.

  முருகன் தலத்தின் சிறப்பு

  ஒவ்வொரு நாட்டுக்கும் தனிச்சிறப்பு உண்டு. அப்படி நம் பாரத நாட்டுக்கும் பல தனிச்சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, ஆங்கிலேயர் உருவாக்கி வைத்தது. நம் நாடு ஒரு தனி கண்டத்துக்கு உரிய பண்புகளோடு திகழ்வதால், இதை இந்தியத் துணைக்கண்டம் என்று ஆங்கிலேயர் அழைத்தனர். ஆனால் நாம் பாரத நாடு என்று ஒற்றுமை உணர்வோடு போற்றி மகிழ்கிறோம். நம் தமிழ்நாட்டுக்கும் பல தனித்துவச் சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பாக பாண்டிய நாட்டின் அங்கமாக இருந்த நெல்லைச் சீமைக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு...

  அது - ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாகி, பல ஆயிரம் ச.மைல் பரப்புள்ள நிலத்தைப் பசுமையாக்கி, அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் உள்ள கடல்பகுதியில் கடலில் சங்கமிக்கிறது என்ற சிறப்பு பெற்ற தாமிரவருணி நதி ஒரு சிறப்பு. மற்றொரு சிறப்பு, பழங்கால இலக்கியங்கள் காட்டும் ஐவகை நிலப்பரப்பும் கொண்ட ஒரே பகுதி என்ற சிறப்பு கொண்டது நெல்லைச் சீமை என்பதே அது.

  மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி, நிலமும் நிலம் சார்ந்த இடமும் - முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் - மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல், வறண்ட பகுதி - பாலை என்று ஐவகை நிலப்பகுதியைப் பிரித்து வைத்தது முன்னோர் சாதனை. இந்த ஐவகை நிலப்பரப்பும் நெல்லைச் சீமையிலேயே உள்ளது.

  சிலப்பதிகாரம் சொல்லும்... குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும்... என்று! பாலை என்ற ஐந்தாவது நிலப் பகுதி, தனியாக இல்லாதுபோயினும், குறிஞ்சியும் முல்லையும் தட்பவெப்ப நிலை மாறின், பாலையாக மாறுகிறது என்பது இதன் கருத்து. ஆனால், நெல்லைச் சீமையில் இந்தப் பாலை நிலமும் உண்டு. வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிலப்பகுதி அதைச் சொல்லும். ஆக, இந்த ஐவகை நிலப்பாகுபாடும் நெல்லைச்சீமையில் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பகுதியில், முருக வழிபாடும் திருமால் வழிபாடும் செழித்தோங்கியுள்ளது. மாலவன் பேர் சொல்லும் நவ திருப்பதிகள் இந்தத் தாமிரபரணிக் கரையோரம் சிறப்புற விளங்குகிறது. அதுபோல் பொதிகை மலையை ஒட்டிய திருமலைக்கோயில் முருகப் பெருமானும், கடற்கரையை ஒட்டிய பகுதியான திருச்சீரலைவாய் என்று போற்றப்பெறும் திருச்செந்தூர் முருகப் பெருமானும் நெல்லைச் சீமைக்கு அணிசேர்த்து அருள் செய்கின்றனர்.

  குறிஞ்சி நிலத்தெய்வமான முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள். இயற்கை நலமுடையவன், எழில் உடையவன், மணம் உடையவன், அறிவு உடையவன், நிறைந்த செல்வத்தை அளிப்பவன் என்று வெறு பல பொருள்களும் உண்டு. முருகப் பெருமான் கையில் வேலை வைத்திருக்கும் காரணத்தால் அவனை வேலன் என்றும் அழைத்தனர். சங்ககால இலக்கியங்கள் பலவும் வேலன் என்ற பெயரை அழகுற வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, திருமுருகாற்றுப்படை இலக்கியம் குறிஞ்சி வேலவனுக்கு நோன்பு நூற்று மக்கள் வழிபட்ட அழகை விவரிக்கிறது. சிலப்பதிகாரம், முருகனது பெருமைகளையும், அவன் அமர்ந்த குன்றுகளின் சிறப்புகளையும் கூறுகிறது. குன்றுதோராடும் குமரன், குற்றாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் திருமலையிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறான்.

  பிரணவ மலை - திருமலை

  தமிழகத்தின் மேற்கு அரணாக விளங்கக் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சியாக நிலப்பகுதியோடு இணைந்து திருமலை விளங்குகிறது. இது கவிர மலைப் பகுதி என்று வழங்கப் படுகிறது. கரவி மலை என்பது கவிர மலை ஆகியது என்பர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் பரிபாலித்த பகுதி இந்தப் பகுதியில்தான் உள்ளது. அதுவே கவிரமலைப் பகுதி. அவனது தலைநகராக இருந்தது ஆய்க்குடி என்று அழைக்கப் பெறும் ஊர். அது இன்றும் ஒரு முருகன் கோயிலோடு திகழ்கிறது. ஆய்க்குடியும் கவிரமலையும் பொதிகை மலையோடு சார்ந்த திருக்குற்றால மலையை ஒட்டி அமைந்துள்ளன. இப்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து, மூன்று மலைகள் சேர்ந்து காட்சியளிப்பதால் இதனை திரிகூடமலை என்றும் அழைப்பர். இதனைப் பிரணவ மலை என்றும் கூறுவர். காரணம் ஓம் என்ற வடிவில் இந்த மலைப் பகுதி அமைந்துள்ளதுதான்... இந்த மலைத்தொடரின் உயர்ந்த இடத்தில் பழங்காலத்தில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று இருந்ததாகவும், நாகம் தனக்கு அளித்த விலையுயர்ந்த ஆடையை ஆய் மன்னன் இந்த லிங்கத்துக்கு அளித்தான் என்றும் சங்க இலக்கியச் செய்தி ஒன்று உண்டு.

   

  கோட்டைத்திரடு கோயில்

  செங்கோட்டையில் இருந்து அச்சன்கோயில் செல்லும் வழியில் பண்பொழியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கோட்டைத் திரடு என்ற சிற்றூர் உள்ளது. பழங்காலத்தில் இங்கு ஒரு கோட்டை இருந்துள்ளது. அதற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. இந்தப் பகுதி சிலகாலம் பாண்டிய அரசர்களின் ஆளுகையிலும் இருந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழும் இருந்துள்ளது. இதற்கான சான்றுகளாக இந்தக் கோட்டைப் பகுதியில் கிடந்த தூண்கள், மண்டப கற்களில் மீன் சின்னமும், வராஹம் மற்றும் லிங்க சின்னமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சேரநாட்டைச் சேர்ந்த பந்தள அரசர்கள் இங்கு கோட்டையமைத்து கோட்டையில் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்களாம். பகைவர்களாலும் ஆற்று வெள்ளத்தாலும் கோட்டையும் கோயிலும் பெரும் அழிவைச் சந்திக்க, பந்தள அரசமரபினர் இந்தக் கோட்டையை அப்படியே கைவிட்டு அவர்கள் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார்களாம். அதன்பிறகு கவனிப்பாரற்றுப் போனது கோட்டையில் இருந்த கோயில். ஆனால் முருகப் பெருமான் தன் பக்தர் ஒருவர் மூலம் தன்னை வெளிப்படுத்தி, மலைமீது கொண்டான்.

   

  ஆதி உத்தண்ட நிலையம்

  திருமலையில் முதலில் வேல் வழிபாடுதான் இருந்துள்ளது. இப்போதும் இந்த வழிபாட்டு இடத்தை நாம் காணலாம். திருக்கோயிலுக்கு முன்னால் மேற்குத் திசையில் ஆதி உத்தண்ட நிலையம் உள்ளது. வேலும் மயிலுமாகக் காட்சி தரும் இதுவே, பழங்காலம் தொட்டு முருகப் பெருமான் வழிபடு தலமாகக் காட்சியளித்துள்ளது. புளியமரத்தடியில் காட்சி தரும் இதனை அந்தக்காலத்தில் பலர் வழிபட்டு வந்துள்ளனர். அவர்களில் பூவன் பட்டர் என்பாரும் ஒருவர். இவர் திருமலையில் எழுந்தருளியிருந்த ஆதி உத்தண்ட நிலைய மயிலையும் வேலையும் முருகனையும் வழிபட்டு, பூசனைகள் புரிந்த பிறகு புளியமரத்தடியில் சற்றே ஒய்வெடுத்து, பிறகு மலையிலிருந்து கீழிறங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒருநாள் அவர் மதிய நேரத்தில் ஓய்வெடுக்க சிறிது கண்ணயர்ந்த போது, முருகன் அவர் கனவில் தோன்றி 'தாம் கோட்டைத் திரடு கோட்டையில் புதர்கள் மண்டிய பகுதியில் மறைந்து கிடப்பதாகவும், தாம் இருக்கும் இடத்தை கட்டெறும்புகள் கூடி வழிகாட்டும்' என்றும் கூறி மறைந்தான். அதே நேரத்தில், பந்தள அரசர் கனவிலும் முருகன் தன் இருப்பிடம் குறித்த செய்தியைக் கூறி மறைந்தான். உடனே அவர்களும் விரைந்து வர, கோட்டைத் திரடு பகுதியில் பூவன் பட்டர் அவர்களை எதிர்கொண்டழைத்து, முருகன் கனவில் சொன்ன செய்தியைக் கூற, அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பிறகு கட்டெறும்புகள் வழிகாட்ட, அங்கே ஒரு புதருக்குள் மறைந்து கிடந்த முருகப் பெருமானை வெளிக்கொணர்ந்தார்கள். அப்படி மண்ணை வெட்டி விக்கிரகத்தை வெளியே எடுக்கும்போது, மண்வெட்டி முருகப் பெருமான் மூக்கில் சிறிது சேதம் விளைவித்துவிட்டது. இதனை இன்றும் திருமலையில் காணலாம். அதனால் இந்தப் பெருமானை நாட்டுப்புற வழக்கில் மூக்கன் என்றும் அழைக்கின்றார்கள்.

   

  அதன்பிறகு திருமலையில் மலைமீது ஆதி உத்தண்ட நிலையத்துக்கு அருகில் அருமையான ஒரு கோயிலை எழுப்பினார்கள் பந்தள அரசர்கள். அந்தக் கோயில் கேரள பாணியில் அமைந்திருந்தது. பிற்காலங்களில் பலர் பலவிதமான திருப்பணிகளைச் செய்து தற்போதைய பிரமாண்டமான கோட்டை போன்ற இந்தக் கோயிலை நாம் தரிசித்து வருகிறோம்.

  தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.

  இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.

  முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.

  சன்னிதிகள்:

  திருமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னிதி மிகப் பெரிதாக உள்ளது. இந்த விநாயகப் பெருமானை தரிசித்தபின், மலைக்கு ஏறும் படிகள் தொடங்கும் இடத்தில் இரு பாதங்களைத் தொட்டு வணங்கி முருகன் புகழ் பாடி மக்கள் படிகளில் ஏறிச் செல்வர். பரிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் அடுத்து நடுவட்ட விநாயகர் சன்னிதியை அடையலாம். அவரைத் தரிசித்த பிறகு படிகளில் மேலும் ஏறி, இடும்பன் சன்னிதி அடைந்து அவரை வணங்கி பிறகு தொடர்ந்து ஏறவேண்டும். அங்கே இடும்பன் சுனை இருக்கிறது. பிறகு தொடர்ந்து ஏறினால், நந்தகோபர் மண்டபம் வருகிறது. இவற்றைவணங்கி, சுமார் 544 படிகள் கடந்து மேலே உச்சி விநாயகர் சன்னிதியை அடைவோம். அங்கு சன்னிதி 16 படிகளில் ஏறிச் செல்லும் அழகான மண்டபமாக இருக்கிறது. இது, இந்த விநாயகப் பெருமானை வணங்கினால், மக்களுக்கு 16 பேறுகளும் கிட்டும் என்கின்ற தத்துவத்தைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

   

  இந்த விநாயகரை வணங்கி, வலம் வந்து ஆதி உத்தண்ட வேலாயுதத்தையும், சப்த கன்னியரையும் வணங்கி, அருகே இருக்கும் தீர்த்தக் குளத்தை தரிசிக்கலாம். அத்தோடு சுற்றிலும் சூழ்ந்திருக்கும் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேகங்கள் நம் கைகளைத் தொட்டுச் செல்வதுபோல் நம்மை உரசிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.

  பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.

  இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.

   

  விழாக்கள்:

  பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலின் திருவிழாக்கள் திருமலையின் மேல்தளத்திலும் வண்டாடும் பொட்டலிலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் கடைசித் திங்கள் பண்பொழியில் நரீசுவரமுடிஅயார் கோயிலுக்கு எதிர்ப்புறமுள்ல சிங்காரத் தெப்பக் குளத்தில் திருமலைக் குமாரசாமிக்கு தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச உத்ஸவம் இந்தக் கோயிலின் சிறப்பான உத்ஸ்வமாகும். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத ஐந்து தினங்கள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு உத்ஸவங்கள் என்று எப்போதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும்.

   

  குற்றாலத்துக்கு சுற்றுலா வருகிறவர்கள் அப்படியே இந்தத் திருமலைக்கும் வந்து திருமலைக்குமாரசாமியின் தரிசனம் பெற்று சகல நலங்களும் பெறலாம்.

 • THORANAMALAI MURUGAN TEMPLE

  அகத்தியர், தேரையர் சித்தர் தவம் புரிந்த தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில்.

   

 • Today (10.6.2018) is the best day of this Season

  மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் இன்று (10.6.2018) மிக அதிகமாக தண்ணீர் விழுகிறது. அவ்வப்போது மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. நேற்று போல் இல்லாமல் இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்றுதான் இந்த சீசனின் மிகவும் சிறந்த நாள் என்றால் மிகையாகாது.

 • Today (11.6.2018) Night bath in Main Falls is Free from Crowd

  இன்று (11.6.2018) இரவு மெயின் அருவியில் அருமையான குளியல் போட்ட சுற்றுலா பயணிகள் - கூட்டம் குறைவாக உள்ளது, அருமையான சீசனுடன், அவ்வப்போது மழையும் சாரலும், பலத்த காற்றும். சீசன் சூப்பர்...