Kutralam Live

the Spa of South India...
  • Old Falls Season Update (9.6.2018)

    பழைய குற்றாலத்தில் நல்ல நீர் வரத்து உள்ளது. அருமையான சீசனுடன், மழை, காற்று என்று மக்கள் மிகவும் ரசித்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

    மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அதிக நீர் வரத்து காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தால் பழைய குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  • PAALARUVI

    பாலருவி - குற்றாலத்தில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது பாலருவி. குற்றாலத்திற்கு மிக அருகில் கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகே 4  கி.மி பயணித்தால் இந்த பாலருவியை அடையலாம். சுமார் 300 மீட்டர் அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு ரூ.10 வீதம் குளிக்க கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிக்க வசதியாக உள்ளதால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் இங்கே அதிகம் வருகின்றனர்.

  • See How the Water Flow Suddenly Changes in Main Falls

    குற்றாலத்தில் எப்போது தண்ணீர் அதிகமாக விழும் என்று கணிப்பது மிகவும் கடினம் என்பதற்கு இன்றைய வெள்ளப்பெருக்கே நல்ல உதாரணம். கீழே உள்ள படத்தில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முன் எடுத்த படங்களின் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

  • SHENBAGADEVI FALLS

    செண்பக தேவி அருவி - செண்பக மரங்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்த காட்டில் குடியிருக்கும் தேவிக்கு பெயர்தான் செண்பக தேவி. செண்பகதேவி கோவில் அருகில் இந்த அருவி உள்ளதால் இப்பெயர் வரக் காரணம்.

    சிற்றருவிக்கு மேல் மூன்று மைல் தூரம் கால் நடையாக நடந்து சென்றால்தான் இக்கோவிலை அடையமுடியும். இந்த அருவிக்கு செல்லும் பாதையில் வன உயிரினங்கள் அதிகம் உள்ளதால் இந்த அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சிலநாட்கள் மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்குவர்.

  • Slow Motion Video of Main Falls in Full Flow (13.6.2018)

    மெயின் அருவியில் நேற்று (13.6.2018) அதிக நீர்வரத்தின் போது எடுக்கப்பட்ட SLOW MOTION காணொளி.

     

  • Slow Motion Video of Old Falls

    பழைய குற்றால அருவியின் SLOW MOTION காணொளி. ஒவ்வொரு துளியும் மிக அருமை.

  • Today (10.6.2018) is the best day of this Season

    மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் இன்று (10.6.2018) மிக அதிகமாக தண்ணீர் விழுகிறது. அவ்வப்போது மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. நேற்று போல் இல்லாமல் இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்றுதான் இந்த சீசனின் மிகவும் சிறந்த நாள் என்றால் மிகையாகாது.

  • Today (11.6.2018) Night bath in Main Falls is Free from Crowd

    இன்று (11.6.2018) இரவு மெயின் அருவியில் அருமையான குளியல் போட்ட சுற்றுலா பயணிகள் - கூட்டம் குறைவாக உள்ளது, அருமையான சீசனுடன், அவ்வப்போது மழையும் சாரலும், பலத்த காற்றும். சீசன் சூப்பர்...

  • Video - Flood in Main falls on 14.4.2018 & 30.7.2017

    14.4.2018 அன்று மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளம்.

  • Video - Main Falls in Full Flow (9.6.2018)

    குற்றாலம் மெயின் அருவி வெள்ளம் - இன்று (9.6.2018) மெயின் அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காணொளி.

Page 2 of 2