பேரருவி (மெயின் அருவி) - குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.
கேரளாவில் உள்ள இடுக்கி அணை தனது முழு கொள்ளளவான 170 மீட்டரை அடைந்ததால் திறந்து விடப்படுகிறது. இதற்கு முன்னர் 1992ல் திறந்துவிடப்பட்டது. 18 வருடங்களுக்குப்பிறகு இப்போது திறந்துவிடப்படுகின்றது. அதன் காணொளி இங்கே...
நிரபுத்தரி பூஜை - உயிரை பணயம் வைத்து சபரிமலை சென்ற இளைஞர்கள்...
"நிரபுத்தரி" என்னும் ஆண்டுற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன் , யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
கோவிலுக்கு நெல் கதிர் கொண்டு போவதற்கு உள்ள அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டதாலும் , காட்டாற்று.வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலை ப்ரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்னும் சூழ்நிலையில்...
ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி என்னும் 4 இளைஞர்கள் இந்த நெற்கதிர் கொண்டுவரும் பொறுப்பு ஏற்று, தங்கள் உயிரைப் பணையம் வைத்து , காட்டாற்று வெள்ளமாக , மரங்களும் மற்றும் பாம்புகள் என பலவும் அடித்து செல்லும், கரை புரண்டு ஓடும் பம்பையாற்றை , பல அணைகள் நிரம்பி வழிந்து , பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில் , யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து , பெரும் சாகசமாக நீந்திக் கடந்து , அக்கரை சேர்ந்து குறித்த நேரத்தில் சபரிமலை கோயில் சடங்கு நடைபெறும்படி கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
( அந்த 4 இளைஞர்களின் நம்பிக்கைக்கு ஸ்ரீ ஐயப்பன் உடன் இருந்து அருள் செய்து காத்திருக்கிறார் )
இத்தனை சிரமங்களுடன் ஆற்றை கடந்த பின், சாலை வழியாக டிராக்டரில் இந்த மூட்டையை கொண்டு செல்லலாம் என்றால் அதுவும் இயலவில்லை. மரங்கள் சரிந்து, விழுந்து கிடந்ததால் சாலை வழியாக ட்ராக்டரில் கொண்டு செல்ல இயலவில்லை.
இதுபோன்ற பல தடைகள், கால தாமதத்தால், குறிப்பிட்ட நேரத்தில் சடங்குகள் நடை பெறுமா என்ற நிலையில், ( உயிரை துச்சமென மதித்து நம்பிக்கையுடன் தெய்வ கைங்கர்யம் செய்த பக்தர்கள்பால் ஸ்ரீ அய்யப்பன் கொண்ட கருணையால் ) பல பெரும் சிரமங்களை கடந்து குறித்த நேரத்தில் கோவிலின் சடங்குகள் நேற்று நடை பெற்றது.
காலையில் சங்கு ஊதும் இரு ஊழியர்கள் வர இயலவில்லை.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்னாடகா , கேரளா போன்ற பல இடங்களிலிருந்து ஏராளமாக வந்திருந்த பக்தர்கள் எர்மேலி, பத்தினம்தட்டா போன்ற இடங்களில் கேரள அரசால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும் அசம்பாவிதங்கள், தவிர்க்கவே...
எனவே, சபரிமலை சரித்திரத்தில் முதல் முறையாக பக்தர்கள் யாருமே இல்லாமல் சடங்குகள் , பூஜைகள் நேற்று நடைபெற்றன.