குற்றாலத்தில் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இரவு பகல் என்ற வித்தியாசம் கிடையாது. ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் குளிக்க முடியுமா?

குளிப்பதருக்கு பாதுகாப்பாக விளக்குகள் எரியுமா? மக்கள் குளிப்பார்களா? பாதுகாப்பு உள்ளதா? என்ற ஒரு வினா இருக்கத்தான் செய்கிறது. அருவியில் குளியல் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இருபத்திநாலு மணி நேரமும் அருவியில் மக்கள் கூட்டம். ஆணும் பெண்ணும் குளித்து கொண்டுதான் இருப்பார்கள். குளியலுக்கு ஏற்றது பகலா? இரவா? என்ற ஒரு பட்டிமன்ற தலைப்பு வைத்தால், இரவு தான் என்று முக்கால் வாசி மக்கள் சொல்லுவார்கள். பகல் பொழுதை விட இரவு நேர குளியல் சுகமான தூக்கத்தை தரும், களைப்பையும் போக்கும். பகலை விட கூட்டம் இல்லாத அருவி, வருடம் தோறும் இரவு நேரத்தில் பகல் போன்று ஆக்கும் பிரகாசமாக எரியும் ஹலோஜன் பல்புகள், பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருக்கும்போது இரவு நேர குளியல் பயம் இல்லாத இனிமையான குளியல்தான்.