குற்றாலம் அருள்மிகு திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் தெப்பத் திருவிழா தை 5ம் தேதி (18.01.2014) சனிக்கிழமை மாலை சித்திரை சபையில் எழந்தருள்ளி,

சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு, அதன் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 7.00 மணி அளவில் சித்திரை சபையின் முன்புள்ள தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சிகுமாரர் தெப்பத்தில் பவனி வர பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் திருவிழாவைக் கண்டு ரசித்தனர். 10 மணியளவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழந்தருள்ளி வீதி உலா வந்தனர். இவ்விழாவில் ஏராளமான ஐயப்பா பக்தர்கள், பொதுமக்கள், சுற்றலா பயணிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடு - கோயில் நிர்வாகம், செயல் அலுவலர் திரு A.வெங்கடேஷ் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். பாதுகாப்பு பணியில் குற்றாலம் காவல்துறையினர் ஈடுப்பட்டனர்