செங்கோட்டை அருகே உள்ள தென்பொத்தை என்ற எழில் மிகு கிராமத்தில் இன்றும் நம் மண்ணின் பெருமையை பறை சாற்றும் விதத்தில் நாம் முன்னோர்கள் நமக்கு

விட்டு சென்ற சமையல் செய்யும் மண் பானை தொழிலை அறுப்பத்திஏழு வருடமாக செய்து வருகிறார்கள். காலத்தில் வழக்கொழந்து போன மண்பானை முன்றாம் தலைமுறைக்கு மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விஷயம். ஆச்சி சமையல் முதல் ஸ்டார் சமையல் வரை பானைகள் பயன்படுத்தி செய்யும் சமையலுக்கு அடிமை ஆகாதவர்கள் யாருமில்லை எனலாம். இந்த குற்றாலம் சீசனில் புதிதாய் அறிமுகமான நாட்டுகோழி ரெஸ்டாரன்ட் மண்பானை சமையல் ருசி வாடிக்கையாளர்களை தன்வசம் தக்கவத்துக் கொண்டன.அதைப்போல் தென்காசியில் உதயமான நந்தினி கூரைக்கடையில் மண்பானை சமையல் அனைவரின் எதிர்பார்பையும் கவர்ந்துள்ளது.வீடுகளில் மண்பானையில் செய்யும் மீன் குழம்பிற்கு இன்னும் மவுசுதான்.சொந்த ஊரில் எடுத்த குளத்தின் களிமண்ணை கொண்டு கால்களால் மிதித்து கைகளால் உருவாக்கிய பானைகள் சந்தைக்கு விற்பனைக்கு வர 36மணி நேரம் ஆகிறது.அதற்கு கொடுக்கும் விலையோ சொற்பம்தான். ஆதனால் செய்யும் உணவின் சுவையோ வார்த்தையால் விவரிக்க முடியாத ஓன்று. நம் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகாமையில் உள்ள 'பெண்களின் சபரிமலை' என்று வர்ணிக்கப்படும் ஆற்றுக்கால் பகவதியம்மன் திருக்கோயிலில், இந்த ஆண்டு பொங்கல் திருவிழா வருகிற 16 ம் தேதி காலை 10 மணியளவில் நடைப்பெறயுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் கூடி பொங்கலிடுவர்கள்.அந்த பொங்கலிடும் பானைகள் இங்கிருந்து கொஞ்சம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.