குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை (15.2.2014) இந்துசமய அறநிலையைத்துறை சார்பில் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் ஆலயத்தின்

மூலம் நடத்தப்பட்ட 3004 திருவிளக்குப் பூஜையில் கல்லூரி மாணவிகளும், பேராசியர்களும், ஸ்ரீ பராசக்தி வித்யாலயாவின் மாணவிகளும், ஆசிரியர்களும் பங்குபெற்ற வழிபாடு மிக விமர்சையாக நடைப்பெற்றது.

மாலை 5.00 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையைத்துறை அமைச்சர் திரு.பூ.செந்தூர்பாண்டியன் அவர்களும், இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர் திரு.ப.தனபால்.அவர்களும், வீட்டு வசதி வாரிய தலைவர் திரு.முருகைய பாண்டியன் அவர்களும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் .மு.கருணாகரன் அவர்களும் வருகை புரிந்து விழாவின் முதற்கட்டமாக கல்லூரியின் வாயிலில் 27 நட்சத்திரங்களுக்குரிய 66 ராசி மரக்கன்றுகளை நட்டனர். விழாவின் தொடர்ச்சியாக உலக மக்கள் அமைதிக்காகவும், நாட்டு மக்கள் நலமாக வாழவும் வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இவ்விழா ஏற்பாட்டினை கல்லூரி செயலளர் மற்றும் திருநெல்வேலி மண்டல இணை ஆணையருமான திரு.ம.அன்புமணி அவர்களும், கல்லூரிமுதல்வர், பேராசியர்கள், அலுவலர்கள், திருக்குற்றாலநாதர் கோயில் செயல் அலுவலர் திரு.A.வெங்கடேஷன் அவர்களும் மற்றும் கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் திருமதி A.லதா அசோக்பாண்டியன் அவர்களும், அசோக்பண்டியன் அவர்களும் மற்றும் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.