குற்றாலம் அருகேயுள்ள இலஞ்சி பாரத்மாண்டிசோரி பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் முதல் மற்றும் முன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளயில் 241 மாணவ,மாணவிகள் பத்தாம் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்வாகினர்.

இதில் மாணவி எம்.சுப்ரிதா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்றார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு...

(எம்.சுப்ரிதா 499/500)

தமிழ் 99
ஆங்கிலம் 100
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
   

இப்பள்ளியை சேர்ந்த தான்யா (497/500), சிவரஞ்சனி (497/500), ரித்திகா கார்த்திகேசன்(497/500) ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளியின் தாளாளர் திரு மோகன கிருஷ்ணன், முதலவர் திரு.காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.


அதைப்போலவே பழையக் குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி ஷிவானி (497/500), மாணவன் சாகுல் ஹமீது பாசில் (497/500) ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளியை சேர்ந்த மாணவி s.சுபாயோகா (496/500) மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் நான்காம் இடத்தையும், பள்ளியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவ மாணவியை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல்,துணை முதல்வர் கஸ்துரி பெல் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

மேலும் தென்காசி USP பள்ளியை சேர்ந்த மாக்தலீனும் மாநிலத்தில் 3 ம் இடத்தை பிடித்துள்ளார். அனைவருக்கும் kutralalive.com சார்பில் வாழ்த்துக்கள்.