காபி பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி,குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து விட்டு வரும் போது, குளிர்க்கு இதமாக இராஜபாளையம் காபி குடிப்பது,

அந்த சுவையே ஒரு அலாதிதான். வருடம் தோறும் சீசன் காலங்களில், தமிழ் நாடு பால் வளத்துறை சார்பு நிறுவனமான இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், குற்றாலம் காபி ஸ்டால் அமைப்பது வாடிக்கை. இந்த வருடம் சீசனை முன்னிட்டு 13.6.14 அன்று காலை இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தலைவர் M.P.முருகையாப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கி, விளக்கேற்றி, விற்பனையை தொடங்கி வைத்தார்.

இங்கு வரும் வாடிக்கையளர்கள், இவர்கள் தயாரிக்கும் பில்டர் காபி சுவைக்கு கட்டுண்டு இருப்பது, நாம் ஒரு காபியை குடிக்கும் போதே நன்கு புலானாகிறது. தண்ணிர் கலக்காத கறவை பால், இன்னமும் பழமையை மறக்கமால் பாலை சுட வைக்க பயன்படுத்தும் கரி அடுப்பு, யார்க்கும் சொல்லாத சூச்சுமம், சரி விகிதத்தில் கலக்கும் காபி சிக்ரி, இதுதான் இவர்கள் அதிக வாடிக்கையாளர்களை சுண்டியிழுக்கும் ரகசியமோ. இங்கு வந்து ஒரு காபி குடித்தால் கூட அதன் சுவை நான்கு மணி நேரம் வரை தாக்கு புடிக்கும். அந்த அளவு பாலின் குணம். அடுத்து இவர்கள் சொந்த தயாரிப்பான பால்கோவா தமிழ் நாடு முழவதும் பிரசித்தம். சீசன் காலங்களில்.பால்கோவா வாங்க இன்றைக்கும்கூட கூட்டம் அலைமோதத்தான் செய்கிறது. காலை5.00 மணி முதல்11.00 மணி வரை, மாலை4.00 முதல்இரவு 8.00 மணி வரை. காபி ரெடி.