குற்றாலம் வரும் சுகவாசிகளின் ஷாப்பிங் லிஸ்டில் முதல் இடம் பெறுவது சீசன் தோறும் குவியும் அரிய மருத்துவ குணங்கள் நிறந்த பழங்களான மங்குஸ்தான், ரம்டன்,

துரியன், ராமர் சீதா பழம், முட்டை பழம், பட்டர் புருட் என அடுக்கி கொண்டே போகலாம். அருவிக்கு செல்லும் வழியெங்கும் நம் கண்ணை வியக்க வைக்கும் அழகுடைய பழக் கடைகள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள். அனைத்து பழ வகைகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகிற நிதர்சனமான உண்மை. அனைவரும் கண்ணை மூடி ஒட்டு மொத்தமாக பழத்தை வீட்டுக்கு வாங்கி செல்லுதலே நமக்கு புரிகிறது.

உடலுக்கு குளிர்ச்சியை தருகிற மங்குஸ்தான் தற்போது கிலோ 200 க்கு விற்கப்படுகிறது .

இனிப்பும், புளிப்பும் உடைய, உடலுக்கு வைட்டமின் சி சத்து தருகிற ரம்டன் பழம் கிலோ 200 க்கு விற்கப்படுகிறது.

மலச்சிக்கலை போக்கும் நார் சத்துள்ள முட்டை பழம் கிலோ 140 க்கும், ஸ்டார் புருட் கிலோ 120 க்கும் விற்கப்படுகிறது

குழந்தை வரம் தருகிற துரியன் பழம் கிலோ 500 க்கு விற்கப்படுகிறது.