ஜூலை 3 அன்று வ.உ.சி. அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில், தென்காசி பொது நூலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அரசு பொது தேர்வில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடை பெற்றது.

விழாவில் வாசகர் வட்டத் தலைவர் எஸ்.கே.பாலாசுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட நுலக அலுவலர் மந்திரம், வாசகர் வட்டப் பொருளாளர் சேகர், துணை தலைவர் அருணாசலம், சாந்திநடராஜன் முன்னிலையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.திரு.சரத்குமார் அவர்கள், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதி பள்ளிகளில் அரசு பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மேரி ஹெப்சியா சொரூபராணி, மயிலேறும் பெருமாள், செங்கோட்டை வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் வேலுசாமி, பொது மக்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுந்தர், நிஷா, ஜூலியா, பாலசுப்ரமணியம், முருகேசன், மேரி ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் ராமசாமி வரவேற்றார். கணேஷன் நன்றி கூறினார்.