சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கிய படகு சவாரி, இந்த வருடம் சீசன் காலதாமதமாக் தொடங்கிய நிலையில் குளத்தில் போதிய அளவு தண்ணிர் இல்லாத காரணத்தால் துவங்குவது தாமதமானது.

 

குளத்தில் தண்ணிர் தற்போது நிரம்பி உள்ளதால், படகு சவாரி துவங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. அனைவரும் குடும்பத்துடன் படகு சவாரியில் சென்று மகிழ்கின்றனர். தமிழ் நாடு சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படும் படகு குழாமில் இரண்டு இருக்கை படகுகள் 9, நான்கு இருக்கை படகுகள் 18, நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5.தனி நபர் இயக்கும் ஹாயக் வகை படகுகள் 4 என மொத்தம் 36 உள்ளது. இரண்டு இருக்கை படகுகள் அரை மணி நேரத்திற்க்கு கட்டணமாக 100, நான்கு இருக்கை மிதி படகுகளுக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணமாக 125, நான்கு இருக்கை துடுப்பு படகில் சவாரி செய்ய கட்டணமாக 155, ஹாயக் எனும் தனி நபர் இயக்கும் படகுக்கு 75 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. சவாரி செய்யும் பயணிகளுக்கு உயிர் கவசம் அளிக்கப் படுகிறது.

சுற்றுலா பயணிகளை உற்சாக படுத்தும் படகு சவாரியை அமைச்சர் திரு.செந்தூர்பாண்டியன் துவக்கி வைத்தார். கலெக்டர் கருணாகரன், வசந்திமுருகேசன் எம்.பி, அதிமுக நிர்வாகிகள் - சண்முகசுந்தரம், அசோக்பாண்டியன், கணேஷ்தாமோதரன், அமுல்ராஜ், சேகர், ஜெய் சங்கர் மற்றும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் திரு.லதா அசோக்பாண்டியன், ஆ.ர்.டி.ஓ பொறுப்பு ஹாரிஸ், தாசில்தார் சொர்ணராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெகன், தமிழ் நாடு ஓட்டல் மேலாளர் கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.