குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அசைவம் உணவு பழக்கம் உள்ளவர்கள் அதிகம்தான் எனலாம்.

 

சைவ கடைகள் விட அசைவ கடைக்குதான் கூடுதல் வாடிக்கையாளர்கள் ஆகையால் என்னவோ காலை முதல் இரவு வரை அசைவம் கடைகளுக்கு சக்கை போடுதான் போங்க. தென்காசி மார்க்கெட் சமீபம் உள்ள நந்தினி கூரைக்கடையில் பறப்பது, நடப்பது, மிதப்பது என எல்லா ஜீவராசிகளும் உணவாக தாயரித்து இலையில் வித விதமாக சுடச்சுட பரிமாறினால் கூடுதல் ஜாலிதான். கார சாரமாக வந்த இடத்தில் வீட்டில் இருப்பது போல சுவையாக கிடைத்தால், வாடிக்கையாளர்களுக்கு சொல்லவா வேண்டும்? பொதுவாக சைவத்தில் மதிய சாப்பாடு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு என்றுதான் ருசித்திருப்பிபோம். ஆனால் அசைவ உணவில் இங்கு சாப்பாட்டுடன் மட்டன் குழம்பு, கோழி குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு என இலையில் இன்முகத்துடன் பரிமாறி நம்மை ருசியால் கட்டி போடுகிறார்கள். நடப்பதில் மட்டன், மட்டன் எண்ணெய் கறி, குடல், தலை கறி, மண் ஈரல் கட்லெட், நீந்துவதில் அயிரை மீன் குழம்பு, விரால் மீன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு, மோலி மீன் குழம்பு, கனவா மீன் குழம்பு, நண்டு, இரால் மீன் குழம்பு, சுறா மீன் குழம்பு, கெழுறு மீன் குழம்பு, வவ்வால் மீன், சுறா புட்டு, சீலா மீன் பிரை, கருவாட்டு குழம்பு, சாலை மீன் பிரை, பறப்பதில் சிக்கன் குழம்பு, நாட்டு கோழி சுக்கா, லாலி பாப், நாட்டுக் கோழி பொறியல், காடை என அனைத்து வகைகளும் ஒரே கூரையின் கீழ் ருசியாக கிடப்பதால் குற்றாலம் வரும் அசைவை பிரியர்கள் இங்கு குடும்பத்துடன் வந்து உண்டு மகிழ்கின்றனர்.