பழைய குற்றாலத்தில் நல்ல நீர் வரத்து உள்ளது. அருமையான சீசனுடன், மழை, காற்று என்று மக்கள் மிகவும் ரசித்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அதிக நீர் வரத்து காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தால் பழைய குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.