மெயின் அருவியின் மேல் இருந்து பார்க்கும்போது குற்றாலத்தின் அழகு நம்மை சொர்கத்துக்கே அழைத்துச் செல்லும்.
மேலும் குற்றாலநாதர் கோவிலின் சங்கு வடிவ அமைப்பையும் அங்கிருந்து காணலாம். வருடத்தின் சில நாட்கள் மட்டும் (சித்ரா பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில்) செண்பக தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் நாம் அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதி உண்டு.