மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் இட்லி என சொல்லிக்கொண்டு போனால் அந்த வரிசையில் பார்டர் ரஹ்மத் புரோட்டாவும் சேர்த்து கொள்ளலாம்.

நாற்பது ஆண்டுகளாக நம் நாவை சுண்டியிழுக்கின்ற சுவையை கொடுத்து வரும் பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை சிறியவர் முதல் பெரிவர் வரை மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது எனலாம். குற்றாலம் வரும் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை கோழி சால்னா உலகம் முழுதும் பிரசித்தம். சொந்த தயாரிப்பில் திரித்த மசாலா பொடி கொண்டு நாட்டுக்கோழியில் தயாரிக்கும் சால்னா அந்த வழியாகப் பஸ்சில் செல்லும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் மனமும் சுவையும் கொண்டது. எப்போது சென்றாலும் சுடச் சுட புரோட்டாவும் கோழி சால்னா, கோழி சாப்ஸ், சிக்கன் 65 , சிக்கன் ஸ்ப்ரே, மற்றும் காடை ஸ்ப்ரே என்று நம்மை இன்முகத்துடன் நம் இலையை அலங்கரிக்கின்றனர். சாப்பிடும்போதே நாம் அடுத்து எப்போது இங்கு வருவோம் என்ற ஆவலைதான் மேலும் தூண்டுகின்றது.