இக்கோவில் தென்காசியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாம்பவர் வடகரையில் அனுமான் நதிக்கரையில் அமைந்துள்ளது.

பார்பதற்கு சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவில் போன்று காட்சியளிக்கின்றது. பதினெட்டாம் படியினைக் கடந்தால் சுவாமி ஐயப்பன் சாந்த சொரூபமாக சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் இருப்பதுபோல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் ஆண்களும் பெண்களும் இருமுடி இல்லாமல் பதினெட்டாம் படியேறி சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம்.