தென்காசியில் இருந்து ஆயிரபேரி செல்லும் வழியில் உள்ள சித்திர நதியின் தென்புறம் அமைந்துள்ளது இத்திருகோயில். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாத

செல்வங்களை அள்ளி தருகின்ற ராஜகுருவாக விளகிங்குகின்றார்.

ராசிகளில் முதன்மையாக விளங்குவது வியாழன் என்று அழைக்கின்ற குரு,நம் மீது பார்வை பட்டால் கோடி நன்மை என்பார்கள்.அப்படிப்பட்ட குரு பகவான் வீற்றிருக்கும் இத்திருகோயிலில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.00 மணி முதல் பிரம்ம முகூர்த்ததில் நடைபெறும் அபிசேகம் மிகவும் பிரசித்தம் பெற்றது. அதன் பிறகு நடைப்பெறும் 5.00 மணிக்கு (சோடச்ச உபச்சாரம் ) தீபாராதனை பார்ப்பதற்க்கு ஆயிரங் கண்கள் வேண்டும். வியாழக்கிழமைகளில் காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை(சோடச்ச உபச்சாரம்), அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜைகள் சிறப்பகாக் நடைப்பெருகின்றது.மாதத்தில் வரும் கடைசி வியாழக்கிழமை அன்று வெள்ளி அங்கி அணிந்து மிகவும் சிறப்பான தோற்றத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு புன்முறுவலுடன் அருள் பாலிக்கிறார். அன்று காலை முதல் மாலை வரை அனனத்து விளக்குகள் ஏற்றப்பட்டு நடைப்பெறும் விளக்கு பூஜைகள் காண அகத்தில் உள்ள இருள்கள் அகலும். இத்திருக்கோயிலை கட்டியவருக்கும்,சிலையை வடித்தவருக்கும், பூஜைகள் செய்த சாது அவர்களுக்கும் முன்று ஜீவசமதிகள் அமைந்திருப்பது கூடுதல் தகவல். வருடம்தோறும் நடைபெறும் குருபெயர்ச்சி பூஜை ஐயப்பா சாது வழி நடத்தலின் படி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. குருஅருள் பெற, வாழ்வில் வெற்றி பெற, எண்ணங்கள் ஈடுயாற ஸ்ரீராஜகுரு யோக தெட்சணா மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி ஒரு முறை தருசித்து விட்டு வாருங்கள்.