பேரருவியில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது சிற்றருவி.

மலை உச்சியிலிருந்து பேரருவிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி பிரிந்து சிற்றருவியாக உருமாறுகிறது. இதில் சிறுவர்களும் அச்சமின்றி குளிக்கலாம். இங்கும் ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.