குற்றாலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது குண்டாறு அருவி.

செல்லும் வழியெங்கும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கின்றது. குண்டாறு அணையில் உள்ளே இரண்டு கிலோமீட்டர் சென்றால் குண்டாறு அருவியை அடையலாம். அருவிக்கு செல்லும் பதை சற்று கடினமாக பாறைகளாக உள்ளதால் வாகனங்களில் செல்லாமல் ஜீப் மூலமோ அல்லது நடந்து செல்வதோ நல்லது. அங்கு கடைகள் எதுவும் இல்லாததால் செல்லும்போது உணவுகளும் தண்ணீரும் எடுத்துச்செல்வது உகந்தது. ஆனால் அங்கே சில மீன் பொரித்து தரும் கடைகள் மட்டும் உள்ளன. குண்டாறு அணையில் படகு சவாரியும் உள்ளது. நபருக்கு ரூ.20 வசூல் செய்கின்றனர். அணைப்பகுதியில் சிறிய பூங்கா ஒன்றில் சிறுவர்களை மகிழ்விக்கும் சில விளையாட்டு சாதனைகளும் உள்ளது.