குற்றாலத்தில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது பாலருவி. குற்றாலத்திற்கு மிக அருகில் கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகே 4  கி.மி

பயணித்தால் இந்த பாலருவியை அடையலாம். சுமார் 300 மீட்டர் அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு ரூ.10 வீதம் குளிக்க கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிக்க வசதியாக உள்ளதால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் இங்கே அதிகம் வருகின்றனர்.