கும்பாவுருட்டி அருவி குற்றாலத்திலிருந்து 32 km தொலைவில், செங்கோட்டையை அடுத்து கேரளாவில் உள்ள அச்சன்கோவில் செல்லும் பாதையில் உள்ளது.

மேக்கரை வழியாக அச்சன்கோவில் செல்லும் எழில்மிகு  அடர் வன பகுதியில், கொண்டை ஊசி வளைவில் பயணித்தால் அருவியை அடையலாம். செங்கோட்டையிலிருந்து ஓரிரு கேரளா அரசு பஸ்கள் அச்சன்கோவிலுக்கு இயக்கப் படுகின்றன. அந்த பஸ் மூலம் அருவியை அடையலாம். எனினும் கும்பாவுருட்டி அருவிக்குச் செல்ல தனியே வாகனம் இருந்தால் வசதியாக இருக்கும். கேரளா வனத்துறை கட்டுபாட்டில் உள்ள அருவிக்கு செல்ல நபர் ஒருவர்க்கு தலா ரூபாய் 25 வசூலிக்கப் படுகிறது. கார்களுக்கு பார்கிங் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வரும் வாகனங்களுக்கு கேரளா பெர்மிட் அவசியம். கார் பார்க்கிங்கில் சாப்பிடுவதர்க்கு ஏற்ற வகையில் ஒரு ஹோட்டல் மட்டும் உள்ளது,அங்கு புரோட்டாவும்,கடலை கறியும்,பொரித்த மீனும் ,அவித்த முட்டையும் கிடைக்கும்.அந்த காட்டு பகுதியில் குளித்து விட்டு வரும்போது,பசியில் ஒரு கட்டு கட்டலாம்.  குற்றாலம் வரும் உங்களை கும்பாவுருட்டி கொண்டை ஊசி வளைவுப் பாதைகளும், அடர் வனப்பகுதியும் இந்த கேரள மலைப்பாதை உங்கள் பயணத்தை மேலும் உற்சாகப்படுத்த போவது உறுதி..