Rajapalayam Ayyanar Kovil Road, Ayyanar Kovil
1 Votes
Rajapalayam Ayyanar Kovil Road, Ayyanar Kovil
Vote for us:
Water Falls

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

அய்யனார் அருவி - தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ மேற்க்கே அமைந்துள்ளது. இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இது வடகிழக்கு பருவ கால மழையில் நீர் பெறுகிறது.
இந்த அருவி இராஜபாளையம் பகுதியின் முதன்மை சுற்றுலா ஈர்ப்பு பகுதியாக உள்ளது. இது விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்களின் குறிப்பாக திருவில்லிபுத்தூர், சிவகாசி மக்களின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்ள வனப்பகுதி மலை ஏற்றத்தை விரும்புவர்களுக்கு நல்ல இடமாக உள்ளது.
இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் இடமாக உள்ளது. இந்த அருவியானது இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றிர்கும் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு அய்யனார் பெயர் வந்ததற்கு காரணம் இங்கு உள்ள சிறிய காட்டு அய்யனார் கோயிலாகும்.
அய்யனார் அருவி சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் இங்கு வருகின்றனர். மழைக் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெறுக்கால் மக்கள் கோயிலினுள் மாட்டிக் கொள்கின்றனர். அந்தச் சமயங்களில் இராஜபாளையத்தில் உள்ள தீயணைப்பு மீட்டுபுத் துறையினர் வந்து பயணிகளை மீட்டு ஆற்றைக் கடக்க உதவுகின்றனர். பெருமழைக் காலத்தில் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.