GET OUR APP
10.6.2018 - மாலை சீசன் நிலவரம்: அருமையான சீசன் - அதிகமான நீர் வரத்து, பலத்த காற்று, அவ்வப்போது மழை மற்றும் சாரல், அதிக கூட்டம்.
மெயின் அருவியில் அதிக நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.
ஐந்தருவியில் மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இவ்வருட (2018) சீசன் தொடங்கியதற்கான அறிகுறிகள் இன்று காணப்படுகின்றது.குற்றாலத்திலும், சுற்றி உள்ள பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை விழுதல், இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை, தென்மேற்கிலிருந்து வரும் காற்று என்று குதூகுலத்துடன் இவ்வருட சீசன் இன்று தொடங்கியது.ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அருவியில் குளிக்க கூட்டமாக வருகின்றனர். மெயின் அருவியில் இன்னும் நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
குற்றால சீசன் இன்று எப்படி?
Kutralam, the Spa of South India, is a panchayat town situated at a mean elevation of 160 m (520 ft) on the Western Ghats in Tirunelveli District of Tamil Nadu, India. The numerous waterfalls and cascades along with the ubiquitous health resorts in the area have earned it the title the Spa of South India. The falls carry a good amount of water only when there is a rain on the hills. The season begins from June of every year till September. The South West Monsoon brings in the cold breeze with mild temperature. From October to December North East Monsoon sets over in Tamil Nadu and the climate is cold and the rains are very heavy sometimes.Season Period: June to Septemeber is the main season period. The winds from Western Ghats, drizzling rain, sweet water flow in the falls and the healthy atmosphere makes the Kutralam as Heaven.From October to mid of January there may be good water flow, but not considered as season, since the winds from west are missing.For your questions on Season:We cannot predict the exact time of season and water flow in Kutralam. When there is a rain in the hills, the water flow is good. So PLEASE DO NOT ASK US...IS THERE GOOD SEASON ON THAT DAY? IS THERE WATER FLOW TOMORROW? SHALL I COME ON THAT DAY?We don't know the answer for the above questions. We provide all the available updated information on the same in our website & APP. Take a look at our Live Videos & Season Updates, plan accordingly and enjoy Kutralam. We are unable to answer your questions on Season & Water Flow. Sorry.
For Room/House/Resort booking enquiries, bulk food ordering and other similar queries, please fill the form in the Contact Us link.
ஐந்தருவியில் மதிய வெள்ளத்திற்குப் பிறகு நீர் வரத்து சிறிது குறைந்ததால் தற்போது (16.6.2018, மாலை 7.00 மணி) ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெயின் அருவி, ஐந்தருவி இன்று (22.6.2018) மாலை சீசன் நிலவரம் - இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை மற்றும் சாரல் பெய்ததால் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. வார விடுமுறை என்பதால் கூட்டம் நாளை அதிகமாகும் எனத்தெரிகிறது.
The above video is a Time Lapse Video showing the last 6 hours images of Five Falls. Please see the time stamped at the right top corner of the image to check exact time of the image. Sometimes the images may not be uploaded due to unavailability of Internet or Power.
குற்றாலத்தில் பலத்த காற்று - குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. சில நேரங்களில் மழையும் காற்றும் சேர்ந்து புயல் போல் இருக்கின்றது.
மெயின் அருவியிலும் ஐந்தருவியிலும் இன்னும் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் குளிக்க தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கேரளாவில் பாலருவியில் குளிக்க அனுமதி உண்டு. கும்பாவுருட்டி அருவியில் இன்று அனுமதி இல்லை.
இன்னும் விட்டு விட்டு மழையும், பலத்த காற்றும் தொடர்கிறது. சீசன் மிகவும் அருமையாக உள்ளது.
இன்றைய (18.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்...
இன்றைய (19.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்.
நல்ல நேர் வரத்து, குறைந்த கூட்டம்.
இன்றைய (24.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம் - நல்ல நீர் வரத்து, வெயில், ஞாயிறு விடுமுறை என்பதால் அதிகமான கூட்டம், போக்குவரத்து நெரிசல்.
பழைய குற்றாலத்தில் இன்று மிக நன்றாக தண்ணீர் விழுகிறது.கூட்டம் குறைவாக உள்ள காரணத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
இன்றைய (8.6.2018) பழைய குற்றால அருவி சீசன் நிலவரம்:நல்ல நீர் வரத்து, குறைவான கூட்டம்.
பழைய குற்றாலத்தில் நல்ல நீர் வரத்து உள்ளது. அருமையான சீசனுடன், மழை, காற்று என்று மக்கள் மிகவும் ரசித்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அதிக நீர் வரத்து காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தால் பழைய குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குற்றாலத்தில் எப்போது தண்ணீர் அதிகமாக விழும் என்று கணிப்பது மிகவும் கடினம் என்பதற்கு இன்றைய வெள்ளப்பெருக்கே நல்ல உதாரணம். கீழே உள்ள படத்தில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முன் எடுத்த படங்களின் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.
மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் இன்று (10.6.2018) மிக அதிகமாக தண்ணீர் விழுகிறது. அவ்வப்போது மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. நேற்று போல் இல்லாமல் இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி உண்டு. வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்றுதான் இந்த சீசனின் மிகவும் சிறந்த நாள் என்றால் மிகையாகாது.
Page 1 of 2