செண்பக தேவி அருவி - செண்பக மரங்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்த காட்டில் குடியிருக்கும் தேவிக்கு பெயர்தான் செண்பக தேவி. செண்பகதேவி கோவில் அருகில் இந்த அருவி உள்ளதால் இப்பெயர் வரக் காரணம்.
சிற்றருவிக்கு மேல் மூன்று மைல் தூரம் கால் நடையாக நடந்து சென்றால்தான் இக்கோவிலை அடையமுடியும். இந்த அருவிக்கு செல்லும் பாதையில் வன உயிரினங்கள் அதிகம் உள்ளதால் இந்த அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சிலநாட்கள் மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்குவர்.